மறுபக்கம் !
மணி ஓசை முழங்க மங்களகரமாக விடிந்தது மார்கழி மாதத்து திகார் சிறை.. கைதிகள் ஒவ்வொருவராய் வெளியில் வந்தார்கள் . பல நாள் மழிக்காத தாடியுடன் சோறு கஞ்சி உண்டு பல நாள் ஆனது போல் ஒருவன் . இன்று அவனுக்கு விடுதலை .அவன் முகம் இந்தியாவுக்கே பரிச்சயம் . பிரபலமான மந்திரி ஒருவர் தொடர்பான வழக்கில் சிறைக்கு வந்தவன் . வெளியே செல்லும் சந்தோஷத்தின் நிழல் கூட அவனிடம் இல்லை !! வெளியே சென்று என்ன செய்ய !! அரசு வேலையும் போயிற்று !! மந்திரியின் தொடர்புடைய ரவுடிகளால் குடும்பமும் நடுத்தெருவில் !! இந்த உலகமே பெரிய சிறையாய் தோன்றிற்று அவனுக்கு !!
அரை மனதுடன் கையெழுத்து இட்டு ,பழைய துணிகளையும் உடைமைகளையும் வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினான் .துருப்பிடித்த நுழைவாயிலின் கிரீச் சத்தம் மட்டும் அவனை ஆடம்பரமாய் வரவேற்றது. பரபரப்பான தெருவில் யாருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை . ஒன்பதே மாதத்தில் அனைத்தையும் மறந்து விட்டார்களா மக்கள என்று முனங்கிய மனசாட்சியை பொருட்படுத்தாமல் ஒரு தேநீர் கடைக்குள் நுழைந்தான் ..தேநீர் பருகிவிட்டு நகர்ந்த போது
அவன் மந்திரியை அறைந்த புகைப்படம் கொண்ட ஓர் செய்தித் தாள் மூலையில் குப்பைத்தொட்டியில் இவனைப் பார்த்து சிரித்தது !! ....
-முற்றும் !!
ஹர்விந்தர் சிங்க் பற்றியது தான் . ..அவனை வீரன் மாவீரன் என்று போற்றும் நம் மக்கள் அதற்க்கு மேல் அவன் வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பெரிதும் கவலை படுவது இல்லை !! இக் கதை அவன்/அவர் வாழ்கையில் நாளைய கற்பனை பயணம் !! இது போல நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டி விடை பெறுகிறேன் !!
வணக்கம்!!