சொத்தால் அழிந்த குடும்பம் [உண்மை கதை ]

வள்ளி மிகவும் அழகானவள்.அவள் அழகை பார்த்து மிகவும் பணக்காரன் ஒருவன் அவளை திருமணம் செய்து கொண்டேன். அவன் பெயர் சேது. இருவரும் நலமாக வாழ்தார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு பழனி என்று பெயர் வைந்தர்கள் . மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.

சேது பணக்காரன் என்பதால் அந்த ஊரில் வனிதா என்பவள் சேதுவை வளைத்து போடு கொண்டாள்.
பின்பு வனிதாவை திருமணம் செய்து கொண்டான்.
வள்ளி என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்ந்து வாழ்தால்.வனிதாக்கு முதலில் ஒரு ஆண் குழந்தையும் பின்பு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

சேது இரு வீட்டும் போவன் வருவான். குழந்தைகள் அனைவரும் பெரியவர்கள் ஆனார்கள்.
சேது நோயால் படுத்தான் சில நாள்களில் இறந்தும் போனான்.சேது இறந்த பின் வனிதா அனைத்து சொத்துகளும் தானே அடைய ஆசை பட்டாள்.

வள்ளி மகன் பழனி வேலைக்கு சென்று வந்து கொண்டு இருந்தான். வனிதா இந்த சமையத்தில் அவள் தனியாக பிரிந்து வந்தாள்.

பழனி ஒரு முறை விறகு வெட்ட போன இடத்தில் பாம்பு கடிந்து இறந்து விட்டேன். அவன் போன பின் வள்ளிக்கு பைத்தியம் பிடித்தது போல் ஆனாள். மகனை எரித்த பின் அவன் எலும்புகளை கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக கடிந்து சாப்பிட்டு விட்டல் வள்ளி. இதனை பார்த்து இதுதான் சமையம் என்று வனிதா அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்லி சொத்துகள் அனைத்தும் தன் பெயரில் மாற்றி கொண்டால் வனிதா.

இன்று வள்ளிக்கு 70 வயது ரோடு ரோடக பைத்தியம் பிடிந்தது போல் அலைகிறாள். வனிதா மகன் ,மகளுக்கு திருமணம் செய்து வைத்து சொத்து கொஞ்சம் கொஞ்சமாக விற்று தின்று. பேரன் பேத்தி என்று சந்தோஷமாக வாழ்கிறார்கள். வனிதா மகள் அம்மாவை போன்று இரு திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள்.

வள்ளி இப்படி ஆக வேண்டும் என்று வனிதா நினைத்தது நடந்து விட்டது. வள்ளி மகன் இறக்க வனிதா எதாவது செய்தல என்று தெரிய வில்லை. சொத்துக்காக ஒரு குடும்பதியே இப்படி செய்து விட்டால் வனிதா.

[இது உண்மை சம்பவம் அந்த பாட்டி ரோட்டில் போவதும் அந்த வனிதா மாடி மேல் மாடி கட்டி கொண்டு வாழ்கிறாள் அனைத்து பரிந்து கொண்டு]
[என் இனிய தோழர்களே இந்த உலகில் காசுதான் முக்கியம் என்று நினைத்து இப்படி பல குடும்பம் அழிந்து போய்கிறது நீங்கள் இதை பற்றி என்ன நினைகிறிர்கள்]

எழுதியவர் : g .m .a .kavitha (20-Dec-11, 12:54 pm)
பார்வை : 933

மேலே