"ஆரெஞ்சு"

காலை-ல எழுந்திரிச்சி
ஊர் சுத்துற பட்டாம்பூச்சி
ஒன்ன கையில புடிச்சி
அது உதட்டுல ஒட்டிருக்கிற
தேன தொடச்சி
அதுல சக்கர தண்ணி தெளிச்சி
அம்மி-ல வச்சு அரச்சி
பன்னீர்-ல நனச்சி
பசும்பால்-ல கரச்சி
புரட்டாசி-ல பேஞ்ச மழதுளிய கிழிச்சி
அதுல இத திணிச்சி
சுளையோட கருவ படச்சிட்டான்...

தெரிஞ்சும் தெரியாத மாதிரி துணியில,
அம்மாவாசை முடிஞ்சி
அஞ்சாவது நாள் வர பிறை-ய பறிச்சி
அந்த வடிவத்துல ஆடை-ய தச்சி
சுள கருவெல்லாம் அதுல அழக வச்சி
இடையில விதை-ய விதச்சி
சுளை-ய படச்சிடான்...

ஆரோட அஞ்ச கூட்டி
அந்த கணக்குல சுளைய அடுக்கி
அம்மா சுட்ட கொழுக்கட்டை மாதிரி உருட்டி
அது நடுவுல என் காதலி மூச்சு காத்த அடச்சி
செட்டியார் கடையில நூல் வாங்கி சுத்தி
புதையல் மாதிரி வட்ட பொட்டியில போட்டு
அதிகாலை சூரியன் வண்ணதையும்
அந்திமாலை சூரியன் வண்ணதையும்
மாத்தி மாத்தி அது மேல ஊத்தி
ஆரெஞ்சு படச்சிடான்...

எழுதியவர் : சரவண kumar (24-Dec-11, 6:15 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR
பார்வை : 228

மேலே