தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி மெட்டு

தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் தாயே
திருவிளக்கின் ஒளியினிலே நிறைந்திருப்பாய் நீயே

வாடுகின்ற உள்ளத்திற்கு நல்மருந்தாகி
வருத்தம் தனைப் போக்கி என்றும் அருள்புரிவாய் தாயே

அன்னையே நீயே என்னை அன்புடன் காப்பாய்(இரண்டு முறை)

அன்புடனே நாளும் எம்மைப் பேணி வளர்த்தாய்
எமக்கு ஆறுதலை நல்கி இன்பம்
என்றுமே சேர்த்தாய்

எந்தன் தெய்வம் உன்னையன்றி
வேறில்லைத் தாயே
என்றும் இன்முகத்துடன் அருள்செய்ய வந்தருள்வாயே

அன்னையே நீயே என்னை அன்புடன் காப்பாய்(இரண்டு முறை)

பலகவிதைகள் பாடிஉன்னை நாளும் பூஜிப்பேன்
எழில் பைந்தமிழில் சரம் எடுத்து
பாக்கள் இசைப்பேன்

பணிவுடன் உன் பதமலரில் தூவி மகிழ்வேன்
அந்தப் பாடல் கேட்டு உள்ளம் தனில்
குளிர்ந்து அருள்வாய்

அன்னையே நீயே என்னை அன்புடன் காப்பாய்(இரண்டு முறை)

எழுதியவர் : ஸ்ரீ G S விஜயலட்சுமி (24-Dec-11, 6:47 pm)
பார்வை : 362

மேலே