இன்றைய சுதந்திரம்
இன்டர்நெட்டில் முகம் பார்த்து
இமெயிலில் மனம் கொடுத்து
சாட்டிங்கில் கருத்து பரிமாறி
டேட்டிங்கில் இணைந்து
ஆயிரம் காலத்துப் பயிராகிய
திருமணத்தை ஆன்லைனில்
விளையாட்டாய் முடிவுசெய்து
விட்டுகொடுக்கும் மனமின்றி
வீண்வாதம் செய்து
பிடிக்காமல் பிரிந்து செல்வதுதான்
இன்றைய சுதந்திரம்