எழுத்தரசி

எத்தனையோ முகமறியா

தோழர்க்கும்,தோழியர்க்கும்...

ஒளிந்திருக்கும் திறமைகளின்

சங்கமமானாய் நீ...

வெளிப்படையாய் பேசும் வெள்ளந்தி மனிதர்

மட்டும் உலவுகின்ற தளம் இதுவோ...

அன்னையென நீயிருக்க எங்கள்

மன பாரம் இறக்கி வைக்க உன் மடிதானம்

தந்தவளே...எழுத்தரசி..

ஒன்றிரண்டு பிள்ளைகளின் கனவா உன் தளத்தில்

எண்ணிலடங்கா எழுத்தேடுகள் உன் தளம் புகுகிறதே...

வியந்து பார்க்கும் எண்களின் வியத்தகு திறமையினை

மடிநிரப்ப இடம் தந்தாய் மறவாமல் நாமிருப்போம்...

எழுதியவர் : காளிதாசன்... (29-Dec-11, 4:38 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 255

மேலே