2012

வருடம் முடியும் தருணத்தில்
சில வருத்தம் என்சிறு மனத்தில்
நான் தவறு செய்தேன்
பலரை வறுந்த செய்தேன்
அதை தெரிந்தும் செய்தேன்
தெரியாமலும் செய்தேன்
பலர் மீது கோபப்பட்டேன்
பலரை கண்ணீரோடு தூங்கவைத்தேன்
சுயநலமாக செயல் பல செய்தேன்
இத்தனை தவறுகள் நான் செய்தபோதும்
என்னை மன்னித்தது அத்தனை உள்ளமும்
எத்தனை உயிர்கள் எனக்கு இருந்தாலும்
இவர்களுக்கு நன்றியாக நானதைத் தரவேண்டும்!
இன்னல் பல நான் தந்த போதும்
எல்லா உயிர்களும் எனக்கு உதவின
இந்த உயிர்களுக்கு
என் நன்றிகளெல்லாம் அவர் காலடியில்
என் உயிரும்
இவர்கள் காலடியில்
எனக்கு உதவிய உயர் உள்ளங்களையும்
என்னை மன்னித்த மகான்களையும்
வணங்கி வரும்
வருடத்தை வரவேற்கிறேன்!!!

எழுதியவர் : க.ரகுராம் (31-Dec-11, 1:53 pm)
பார்வை : 292

மேலே