கருணை மழையே மேரி மாதா மெட்டு

கருணை மழையே அன்புத் தாயே
கண்கள் திறந்தருள்வாய்
கண்கள் கலங்கும் ஏழை மகளின்
பாடல் கேட்டருள்வாய் (இரண்டு முறை)

சரணம் உந்தன் பாத கமலம்
நம்பிவந்தேன் நான்.............
தஞ்சம் எனவே உந்தன் பாதம்
வேண்டித் தொழுவேன் நான்.............(இரண்டு முறை) (கருணை மழையே.......)

கருணை விழியால் காத்து நாளும்
அருளைத் தந்திடுவாய்.........
கனிந்த மனதில் உருகிப் பாடும்...........
பாடல் கேட்டருள்வாய்............(இரண்டு முறை) (கருணை)

அன்னை நீயே வந்தருள்வாய்...............
அனைத்து நீயே............ காத்தருள்வாய் ....................
வாழ்த்துக் கூறி........... வரமருள........................
விரைந்து நீயே.................... வந்தருவாய்...........
வந்தருள்வாய்.................... (கருணை மழையே.................)

எழுதியவர் : ஸ்ரீ G . S . விஜயலட்சுமி (1-Jan-12, 7:41 pm)
பார்வை : 474

மேலே