மனமே மலர்ந்துவிடு

மனமே மலர்ந்துவிடு
மௌனத்தை கலைத்துவிடு
கடந்த கால ஏமாற்றங்களில்
கலங்கி நின்று விட்டால்
பிறந்த ஆண்டும் நடந்து
விடைபெற்று சென்றுவிடும்
முடிந்த சோகங்களில்
மூழ்கி கிடக்காமல்
முயற்ச்சியின் பாதையில்
கால் பதித்துவிடு
முன்னேற்றத்தை நோக்கி
முனைப்புடன் நடந்திடு
இலட்ச்சியத்தின் எல்லையை
தொட்டு விடு

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-12, 4:54 pm)
பார்வை : 309

மேலே