theadal
என்னுள் ஒளிந்திருக்கும்
ஓர் உயிரின் தேடல் . . .
நீ விட்டு சென்ற சுவசக்காற்றை தேடுகிறேன் . . .
ஓர் முறை சுவாசிக்க. . .
நான் உனக்கும். . . நீ எனக்குமாய் பருகிய,
தேனீர் கோப்பையில் தேடுகிறேன் . . .
உன் இதழ்களின் பதிப்பை . . .
ஓர் முறை முத்தமிட. . .
விலகி ஓட பிடித்து இழுத்த
உன் கரங்களின் தடத்தை தேடுகிறேன் . . .
ஓர் முறை கை கோர்த்து நடந்திட . . .
போ என்றதும் தயங்கி சென்ற
பாதச்சுவடை தேடுகிறேன்... .
என் பாதத்தையும் அதில் பதித்திட. . .
நினைவலைகளை தேடி தேடி அலைகிறேன். . .
ஓர் முறை உன்னோடு வாழ்ந்திட. . .
என் தேடல் தொடருமா . . .?