பட்டங்கள்

அன்று பட்டங்களாய்...
விண்ணிலே பல வண்ணம்
கலைஞனின் கைவண்ணம்.

இன்று பட்டங்களுக்காய்...
கலை கற்றலென்று கலைந்;தோம்
எண்ணங்கள் சிறகடிக்க
கையில் போத்திலுடன்
மண்மோதும் என் கன்னங்கள்

மனதோடு குறுகும் வாழ்க்கைகள்
கனதியாய் காதோரம் நீளும் வார்த்தைகள்

சுயங்கள் தொலைந்து
பயங்கள் பற்றி நிற்க
அபயம் கொடுக்கும் அபாயங்கள்

நீ யார்? உனக்கென்ன அடையாளம்?
சிரிக்க வைக்கும் கோணங்கள்
வெளியார் கேட்க மட்டும்
திகைக்க வைக்கும் பாணங்கள்.

ஓய்ந்து போகும் வேளை
ஒய்யாரமாய் உண்ணலாமென்றுதான்
பாய்ந்து மேய்ந்து படித்தோம்
ஆய்ந்து ஓய்ந்ததெல்லம்
அன்னிய அம்சங்கள் தான்.

நாம் எழுந்திருக்க –பின்
எழுந்து நடக்க.. ஏதாவது
உபாயமிருக்குமா?
உழுதுண்டு உயர்ந்த மண்ணில்
தொழுதுண்டு தொண்டு செய்து
புளுவாய்ப் போன என் மனதைப்
பழுதுபார்க்க பரிகாரம் உண்டா?

அன்று நூல்களில்லாமல்
பட்டங்களில்லை
இன்று
பட்டங்களே நூல்களிடம்
விலை பேசுகின்றன

ஏதோ
பட்டங்கள் பறக்கின்றன
நூல்களை நம்பி..

எழுதியவர் : (3-Jan-12, 11:56 am)
சேர்த்தது : Raja thana
பார்வை : 278

மேலே