நம்பிக்கையில்
பிரிவோம் என்பதை
அறிந்தே நாம் உறவு கொண்டது
உண்மையானால்
மீண்டும் இணைவோம்
என்ற நம்பிக்கையில்
நம் கைகள் இணையும்
என்ற நம்பிக்கையில்
என் விரல்களின் இடைவெளியை
உன்னால் மட்டுமே நிரப்ப
முடியும் என்ற நம்பிக்கையில்
என் கைகளை இறுக்கமாக
மூடி உனக்காக காத்திருக்கிறேன்
சீக்கிரம் திறக்கவா .