புதிர் கவிதை ---புதுமைகள் செய்வோம்
பூக் கூடை
மேடை
சவம்
இது ஹைக்கூ இல்லை புதிர் கவிதை என்று
சொல்லலாம் புதிரை இப்படி விளக்கலாம்
பூக் கூடையில்
புதிதாய் மலர்கள்
மலர்கள் சேர்ந்து
தொடுத்த பூ மாலை
மேடையில் தலைவன்
மார்பில் தவழ்ந்தது
மாரடைப்பில்
தலைவன் மரணம்
வேற்றுமை இன்றி
மௌனமாய் மலர்கள்
சவ ஊர்வலம்
கண்ணீரில்
----கவின் சாரலன்

