பெண் பார்த்தல்

பெண் பார்க்க துவங்கியதிலிருந்து
வரிசையாய் கேள்விகள்!...

நீங்க ஐயங்காரா?
வட கலையா? தென் கலையா?
செட்டியாரா? என்ன பிரிவு?
24 மனை தெலுங்கு செட்டியா?
8 வீடா? 16 வீடா?
பிள்ளைமாரா?
சைவமா? அசைவமா?
முக்குலத்தோரா?
அகமுடையாரா? தேவரா? மறவரா?
முதலியாரா? உடையாரா?
தேவேந்திரகுல வேளாலரா?
பள்ளரா? பறையரா?

என்ன ராசி?
என்ன நட்சத்திரம்?
அடடா சேராதே..
ஆடு-புலி ஜென்ம பகையாச்சே..
யோனிபொருத்தம் இருக்காதே..

ஜாதி தடையில்லை தான்!
நீங்க சாப்ட்வேர் இஞ்சினியரா?
M E / B E ஏதாவது முடிச்சுருக்கீங்களா?
வேலை வெளி நாட்டிலா?
மாத சம்பளம் லட்சத்தை தொடுமா?

சொந்த வீடு இருக்கா?
சொத்து பத்து எதுவும்?

எல்லாம் கேட்டார்கள்..
ஒரு பயலும் கேட்கவேயில்லை..

நீங்கள் நல்லவரா?
பொய் சொல்லாதவரா?
திருடாதவரா?

சொந்த உழைப்பில்
சோறு தின்பவரா?

கட்டிய மனைவியை
கண்கலங்காமல் பார்த்துக்கொள்வீரா?

பிறன் மனை நோக்காத
பேராண்மையாலரா?

காதலை தடை செய்துவிட்டு
கல்யாணத்திற்கும் வழிவிடாத
ஒரு சமூகத்தின் மீதான
அடக்க முடியாத கோபமும்,
காமமும் வெளிப்படுகிறது
என் இயங்குதலில் அதிரும்
பரத்தைகளின் முலைகளில்...

எழுதியவர் : க.இரத்தினகிரி (12-Jan-12, 8:27 pm)
பார்வை : 518

மேலே