ஏறே இளந்தமிழனே

ஏறே இளந் தமிழனே
பொங்கலின் புதிய வடிவம்
சொல்லிடுவேன் கேட்டிடுவாய்
அன்னக் கொடி நாட்டிட வேண்டும்
அன்னப் பந்தல் அமைத்திட வேண்டும்
ஆயிரம் ஆயிரம் ஏழைகளுக்கு அங்கே
வயிறிற்கு சோறு இட்டிட வேண்டும்
அவர் வாட்டத்தை போக்கிட வேண்டும்
முகத்தில் புன்னகை மலர்ந்திட வேண்டும்
அன்றாடம் இதை செய்திட வேண்டும்
கவிதை தளத்தில் அல்ல
உண்மைத் தளத்தில் இது செய்திட வேண்டும்
அவர் கலத்தில் அன்னம் பரிமாறிட வேண்டும்
இல்லாமை இங்கே இல்லாமலே போகவேண்டும்
பசியால் பட்டினியால் ஒருவனும் இங்கே
இறக்கவில்லை என்ற செய்தி
எமன் உலகையும் எட்டிட வேண்டும்
உலகு இய்ற்றியவனும் பரந்துகெட வேண்டாம்
இந்த ஜகத்தினையும் அழித்திட வேண்டாம்
எல்லோரையும் இங்கே வாழவைப்போம்

---கவின் சாரலன்

கவிக்குறிப்பு :

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான் -----வள்ளுவம்

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம் ----பாரதி

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jan-12, 5:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 192

மேலே