நானும் புண்ணியம் அடைந்தேன்
ஜன்னலோர பயணத்தில்
தண்ணீர்காக ஏங்கி நிற்கும் செடிகள்
தாகத்தை தீர்க்க ஓடி வரும் மேகங்கள்
மேகத்தை வரவேற்க ஆடி திரியும் மயில்கள்
மயிலின் நடனத்தில் தலை அசைக்கும் புல்வெளிகள்
புல்லின் மேல் முத்துப்போல் மின்னும் பனி துளிகள்
பயணத்திலிருந்து இரங்கி செல்லும் போது
நானும் புண்ணியம் அடைந்தேன்
அந்த வான் மழையால்
பயணத்தில் இருந்து இரங்கி செல்லும் போது
நானும் புண்ணியம் அடைந்தேன்
அந்த வான் மழையால்

