சபா பதிக்கு மெட்டு

அம்மா கீர்த்தனை

பல்லவி

மகா ஜனனி உந்தனுக்கு
சமானமாகுமா
உலகில் எதுவும் (மகா)

அனுபல்லவி

கிருபாகரி.................

கிருபாகரி............உன்னைப்போல...............(இரண்டு முறை)

கிடைக்குமோ இந்த தாரணி உள்................
அன்பு மகா ஜனனி.........உந்தனுக்கு.............
சமானமா.....................ஆ...................

சரணம்

ஒரு தரம் அன்பு அன்னையவள் மலர்
பாதம் பணிந்தால் போதுமே.............
பரகதிக்கு வேறு புண்யம் பண்ணவேண்டுமா?

அரிய உலகில் மூவர் தொழும்
அன்பு தெய்வம் அவளே...............

அறிந்து சொல்லப்போமோ...........தினம்
அவள் பெருமை தனை நாளும் நாளும்
(மகாஜனனி................)

எழுதியவர் : ஸ்ரீ G S விஜயலட்சுமி (17-Jan-12, 8:46 am)
பார்வை : 234

மேலே