குழந்தையாய் ஒரு அன்னை

ஒரு புகைவண்டி
பயணத்தில்!
யாரும் இரசிக்கவில்லை!
என் அருகில் அமர்ந்து
மழலை மொழி பேசி!
மனக்கவலைஎல்லாம்
மறக்கச்செய்த!
குழந்தை செய்த குறும்புகளை!
எத்தனையோ மனிதர்கள்
அமர்ந்திருந்தும்!
ஏகாதிபத்தியம் பற்றி
சிலர் விவாதிக்க!
காதல் ஜோடியா!
தெரியவில்லை!
ஆனால் அவர்கள் கண்கள்
காதல் கதை பேசியது!
விடியற்காலை விழிப்போ!
உழைத்த களைப்போ!
தெரியவில்லை!
உறங்கிக்கொண்டு சிலர்!
உலகபொருளாதாரம் பற்றி
உரக்க பேசிக்கொண்டு சிலர்!
ஊழல் விவகாரங்கள் பற்றி
உருமிக்கொண்டிருக்க சிலர்!
அடுத்த சந்திப்பில் வண்டி
நிற்க!
சிலர் ஏற சிலர் இறங்க
ஒருஇளம் ஜோடி!
அனைவரது கண்களையும்
கவனிக்க செய்தது!
இத்தனையும் இரசித்த நான்!
இடைவிடாமல்
இரசித்தேன்!
குழந்தையின் குறும்புகளை!
எவரும் இரசிக்கவில்லை!
என்னை தவிர
முதியவர் ஒருவர் பிச்சை எடுக்க
இரயிலில் பாடினார்!
இதோ எந்தன் தெய்வம்!
முன்னாலே!
நான் ஒரேஒரு புன்னகையில்
கண்டேனே!
யாரும் இரசிக்கவில்லை!
அந்த குரலை!
என்னையும் குழந்தையும் தவிர
நானோ பாடலை மட்டும்
இரசித்தேன்!
குழந்தையோ!
அவரின் நிலை கண்டு
இரட்சித்தது!
அம்மாவிடம் அடம்பிடித்து
ஒரு ரூபாய் வாங்கி
பிச்சை இட்டது!
நானோ அதையும் இரசித்து
அமர்ந்திருந்தேன்!
குழந்தையின் அருகில்
இல்லை! இல்லை!
அந்த அன்னையின் அருகில்!
பிச்சை வாங்கிய பெரியவர்
அப்படிதான் சொன்னார்.

எழுதியவர் : குணசேகரன்.K (17-Jan-12, 7:38 am)
சேர்த்தது : Gunasekaran.K
பார்வை : 244

மேலே