காணும் பொங்கல் !
காண வேண்டும் காணும் பொங்கல்
சொந்தங்களை தேடி நீங்கள்
பொழுது போக்கு உலகிற்கு
புகுந்துவிட்டால் மணி கணக்கு
குடும்பம் முழுதும் கூடி இருக்கும்
கும்மாளமாய் நல்ல சந்தோசமாய்
உறவுகளின் வீடுகளில் இன்று
உபசரிப்பிற்கு ஒரு குறை இல்லை
உரிமையோடு முறை சொல்லி
உறவுகள் பகிர்ந்து கொள்ளும்
காளையர்கள் கன்னியரை வட்டமிட
காணாத பெரிவர்கள் கும்மாளமிட
களிப்புடன் இன்று காண்போம்
காணும் பொங்கல் கொண்டாடுவோம் !
-ஸ்ரீவை.காதர் -