பிணை கைதிகளாய் பிணங்கள்
எங்கள் ஊரில்
மளிகை கடைகளை விட
மருத்துவமனைகளின் எண்ணிக்கை
ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது.
அதில் சில
நோயாளிகள் இல்லாமல்
ஈ-யாடுகிறது.
சில
ஊசிகள் மூலம் புது நோய்களை
உட்செலுத்துகிறது...
பாவம்
எங்கள் ஊர்
வெட்டியானுக்குதான்
வேலையில்லாமல் போய்விட்டது...
பல மருத்துவமனைகள்
பணம் கொடுத்தால்தான்
பிணம் தருவோம் என்று
பிடிவாதமாய் சொல்லிவிடுவதால்.
---தமிழ்தாசன்----