நதியோர நாரை
உறவுகளும் உணர்வுகளும் ஓடியது... உலர்ந்தது...
வெள்ளப்பெருக்காய் மாறியது...
அணையிடப்பார்த்த அத்தனை தருணத்திலும்...
சுனாமியின் சிற்றுருவாய் வாழ்வில் பேரலைகள்,
சற்றே நிதானித்தது...
அமைதியை எதிர்பார்த்து காத்திருந்தேன்...
விழுந்தது அருவியாய்....
என்று தான் முடியும் இந்த பயணம்....
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கலக்கும் இடம்
தெரியவில்லை ..
இத்தனையும் இனிதே அரங்கேற,
ஒன்றும் தெரியாமல், புரியாமல்,
கிடைத்த மீனை வரம் என்றும்,
கிடைக்காத மீனுக்கு ஒற்றைக்காலில் தவம் செய்தும்,
ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்க்கிறது என் மனது.... நதியோர நாரையை போல்...