மாற்றுத்திரனாளிகள்

தவறு செய்தவன் இறைவன்
தண்டனை ஏதும் இல்லையோ

குற்றம் புரிந்தவன் அவனே - ஆனால்
குறைகள் மட்டும் என்னுள்

குறையை எண்ணி குறைக்கவும் நேரமில்லை
குமுறி குமுறி அழுதும் பயனில்லை

தீட்டியவன் உறுப்பை ஊனப்படுத்தினாலும்
எங்கள் உள்ளம் ஊனமில்லை

பெயரளவில் கிடைத்த மாற்றம்
எங்கள் வாழ்வில் இல்லையே

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாதது ஏதும் உண்டோ!

எழுதியவர் : சத்தியன் (31-Jan-12, 7:29 pm)
சேர்த்தது : anandhamurugan
பார்வை : 283

மேலே