விருதை முதல் புதுக்கூரைப்பேட்டை வரை

அதோ மஞ்சள்நிற
இருகால் மனிதன்
இவன் தான் எங்கள் ஊர்
அடையாள பிள்ளை

இவர் தான் ஐயனார்
எங்கள் ஊர்
எல்லை காவலாளி
அவர் கையில் உள்ளது
ஏவுகணை அல்ல
வீச்சரிவாள்தான்

சாலையின் ஒருபுறத்தில்
தொடுக்கப்பட்ட பூக்களாய்
வீற்றிருக்கும் வீடுகள்
மறுபுறம் கண்ணிற்கும்
நாவிற்க்கும் உள்ள நட்பை
நாவினில் ஊற்றெடுக்க செய்து
நட்பினை வெளிப்படுத்தும்
இனிப்பின் இருப்பிடாமான
கரும்பு தோட்டங்கள்

நீர் பருகி சிவந்தமண்
ஏரியின் சிறப்பை
வெளிப்படுத்தும் கால்நடைகள்

இதுதான் உழைப்புரிஞ்சிகளை
உழைப்பாளிகலாக மாற்றும்
அரசு வேளாண்மைக்கூடம்

இவைதான் எங்கள்
ஊர் சிற்றரசர்களை
அட்சய பாத்திராமாய்
ஆசீர்வதிக்கும்
கதிர் வயல்கள்

இதோ எங்கள்
ஊர் பழத்தோட்டம்
அங்கு நிறைந்திருப்பது
பழங்கள் அல்ல
பழுத்த இலைகள் தான்

இவர் தான்
எங்கள் மண்ணின் மைந்தர்கள்
கையிலோ பணப்புழக்கம்
மனதிலோ காதல் மயக்கம்

எழுதியவர் : சத்தியன் (31-Jan-12, 10:37 pm)
சேர்த்தது : anandhamurugan
பார்வை : 184

மேலே