தண்ணீர் கண்ணீர்
பருக நீரின்றி உடல்
வற்றி கிடந்தாலும்
கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்தமறுப்பதில்லை
பனித்துளி பருகும்
அற்ப உயிரினம் கண்டு
ஏன் அவைகளாக மாறிவிடக்கூடாது
என எண்ணியதுண்டு
வானமோ இந்த பாவிகளுக்காக
நான் அந்த மேகத்திடம்
பரிந்துரைக்க மாட்டேன் என்றது
இதனால் நாங்கள்
மழையையும் நம்புவதில்லை
மேகமோ நீர்
துளிசிந்த மறுப்பதுண்டு
ஆனால் எங்கள் உடலோ
வியர்வை சிந்த மறுப்பதில்லை
பறவைகளாக பிறந்திருந்தால்
வேற்றிடம் தேடி பறந்திருப்போம்
என்ன செய்வது நாங்கள்
கண்ணீரை தண்ணீராக பருகும்
பாவிகள் தானே!
நாங்கள் நம்பி வாழ்வது
அந்த ரயில் வண்டியைத்தான்
பயணித்திற்காக அல்ல, பாவிகள்
எங்கள் தாகம் தீர்ப்பதற்கு
ரயில்வண்டி கழிவறையில்
தண்ணீர் பிடிப்பது கண்டு
பயணிகளின் கேவலப்பார்வை
எங்கள் தாகம்
அவற்றை பொருட்படுத்தவில்லை
இவர்தான் வீராணத்தை
வீதிவரை கொண்டு வந்த
எங்கள் தொகுதி வேட்ப்பாளர்
இவருக்கு ஓட்டுபோட்ட
நாங்கள் பாவீகள்தானே
அன்றைய உழைப்புரிஞ்சிகல்
இன்றைய முதலாளிகள்
விளைவு வறட்சி !
காரணம் இவர்கள்தான்
இன்றைய நிலத்தடி நீர் உரிஞ்சிகள் !