நம்பிக்கை இல்லாத நட்பு ( சிறுகதை )......

முரளி தனது நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தான் ...

டேய் முரளி ! சீக்கிரம் வாடா என்றான் அவன் நண்பன் ராஜா ,
இவன்கூட படம்பார்க்க போனா எபோதும் இன்டர்வெல்லுக்குதான் போயி சேரவேண்டியதா இருக்கு மனுசனடா நீ என்று அலுத்துகொண்டான் மற்றொரு நண்பன் சுரேஷ்..

முரளி தனது பைக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து நண்பர்களுடன் புறப்பட தயாரானபோது எதிரில் நின்றான் குரு . குரு முரளியின் முன்னாள் உயிர்நண்பன்.

முரளி அவனை காணாததுபோல கிளம்பலாமடா என்றான் நண்பர்களிடம்.
டேய் மாப்புள என்றான் குரு.
கிளம்பலாம்டா என்றான் முரளி தன் நண்பர்களிடம் உடன் ராஜா டேய் !அவன் பேசுறான் கேக்காத மாதிரி கிளம்பலாம்னு சொல்ற ,அவன் நம்ம ப்ரெண்டு டா ....

ப்ரெண்டா அது ஆறு மாசத்துக்கு முன்னால இப்போ இல்ல .அவந்தான சொன்னான் நீயெல்லாம் என் நண்பனே இல்லன்னு இப்போ என்ன புதுசா ப்ரெண்டு. கிளம்பசொல்லுடா அவன என்றான் முரளி ...

மாப்ள என்ன மன்னிச்சுடுடா ! நான் தப்பு பண்ணிட்டேன்டா ! உன்ன புரிஞ்சுக்காம பேசிட்டேன்டா மாப்ள உன் காலுல விழுந்து மன்னிபுகேகுறேண்டா என்று குரு அவன் காலில் விழ எத்தனிக்க உடன் முரளி டேய் மச்சான் என்னடா இப்டி பண்ணுற நான் கோவத்துல இருந்தேண்டா விடுடா எல்லாம் மறந்துட்டேன் விட்டு தள்ளு, வா சினிமாக்கு போகலாம் என்றான் ,
இல்லடா தங்கச்சிக்கு கல்யாணம் வச்சுருக்காங்க வேலை நிறைய இருக்கு என்னால இப்போ வரமுடியாது நீங்க போயிட்டு வாங்க ,

நான் எதுக்கு வந்தேன்னா தங்கச்சிக்கு கல்யாணம் நீ கண்டிப்பா வரணும்டா வந்து எல்லா கல்யாணவேலை எல்லாம் செய்யணும்டா .

மச்சான் உனக்கு என்ன ஹெல்ப்னாலும் என்கிட்டே கேளு நான் பண்ணுறேன் ஆனா உன் தங்கை கல்யாணத்துக்கு நான் வரமாட்டேன் ,
இதுக்கு மட்டும் என்கிட்ட பிடிவாதம் பண்ணாத தயவு செஞ்சு நான் சொல்றத கேளு என்கிட்ட இனிமேல் வர சொல்லி சொல்லாத. மத்தபடி நீ எப்போதும் என் ப்ரெண்டு தான். சரியா
என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் சினிமாவுக்கு கிளம்பினான் முரளி ...

குரு பழைய நினைவுகளை அசைபோட்டவனாய் நடந்த சம்பவத்தை நினைக்க ஆரம்பித்தான் .

முரளியும் குருவும் நெருங்கிய நண்பர்கள் முரளி குருவை எங்கும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டான். அவனுக்காக எந்த அளவுக்குவேண்டுமானாலும் இறங்கி செல்வான்.

ஒரு முறை அவன் தனது சித்தியை ஊருக்கு அனுப்பிவைக்க பேருந்து நிலையத்திற்கு வந்து அவர்கள் செல்லவேண்டிய பேருந்தில் ஏற்றி வழியனுபிவிட்டு திரும்பிப்பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து நின்றான்..

ஒரு இளம்பெண் வாலிபனுடன் கையோடு கைகோர்த்து பேருந்திலிருந்து இறங்கி வந்து அவனோடு பேசிகொண்டிருந்தாள் அவள் வேறு யாரும் அல்ல குருவின் தங்கை ரோகினி.
குருவுக்கு தன் தங்கை மேல் அளவுகடந்த அன்பு பாசம் உண்டு என்பது முரளிக்கு தெரியும்.
இன்று கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.
கோபத்தில் உறைந்து நின்றான் அதற்க்கு காரணமும் உண்டு ..

அதற்கு சில மாதங்களுக்கு முன் ரோகினி வேறு ஒரு ஆடவனுடன் பூங்காவில் பேசிகொண்டிருந்ததை முரளி கவனித்தான் சரி நண்பனாக இருக்கலாம் என்று விட்டுவிட்டான்.
பின் ஒருநாள் முரளியுடன் படித்த அவன் தோழன் முரளி வீட்டுக்கு வந்திருந்தபோது ரோகினியை கண்டு முரளியிடம் விசாரித்தான்..

யாருடா அந்த புள்ள உனக்கு தெரிஞ்ச புள்ளயா டா ,
மாப்ள அது மகா மட்டமான பொண்ணுடா என்றான்..

டேய் ! வார்த்தையை அளந்துபேசு விவரமே தெரியாம எந்த பொண்ணையும் தப்பா பேசாத அது என் ப்ரெண்டோட தங்கச்சி , மவனே அடிச்சு பல்ல கில்ல பேத்துடுவேன் என்றான் முரளி.

இல்ல மச்சான் தேவை இல்லாம சொல்லல இந்த பொண்ணு என் சொந்தக்கார பயல தான் லவ் பண்ணிக்கிட்டு சுத்திகிட்டு இருந்துச்சு அப்புறம் வேற ஒரு பையன லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு போய்ட்டா அவனும் வந்த வரை லாபம்னு விட்டுட்டான் மேலும் சிலவார்த்தைகள் கொச்சையாகி போக போதும்டா நிறுத்து !போதும் என்று கோபத்தில் விம்மி நின்றான் முரளி ..

மச்சான் நான் சொல்றத நம்பினா நம்பு இல்லாட்டா போ எனக்கென்ன நான் வரேன்னு கிளம்பினான் அவன் நண்பன்..

பேருந்து நிலையத்தில் அதை நினைத்தவாறே கோபத்தீயில் நின்றான் முரளி கட்டுபடுத்த நினைத்த கோபம் நில்லாமல் போக அவர்களிடம் விரைந்தான் முரளி . அங்கு முரளியை எதிர்பாராத ரோகினி அவனை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்...

யாருடி அந்த பையன் ? இங்க என்ன பண்ணுறீங்க ?
இல்ல அண்ணா அதுவந்து அது என் ப்ரெண்டு அண்ணா . என்றாள் ரோகினி .
ப்ரெண்டா அடடா !
ப்ரெண்டு கிட்ட இப்டிதான் கைகோர்த்து பேசிட்டு இருப்பாங்களா பார்த்தா அப்டி தெரியலையே.
யாரவது பார்த்த என்ன நினைபாங்க கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா நீ.

முரளி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் மண்ணை பார்த்து கலங்கி நின்றாள் ரோகினி...

உடன் அவளுடன் வந்த வாலிபன் ,
ஹலோ யாரு நீங்க ?
இதல்லாம் நீங்க ஏன் கேக்குறீங்க ?உங்களுக்கெல்லாம் பதில் சொல்லனும்னு அவசியமில்ல என்றான்..

முரளி சட்டென ஆத்திரத்தில் கைகளை ஓங்கியவாறு ..... வாயைமூடு ல இல்லாட்டா வீடுபோய் சேரமாட்ட ல ... அடிச்சு மூஞ்சி மொகறைய பேத்துடுவேன் ஒழுங்கா ஓடிடு என்றான்..

ஹலோ மரியாதையா பேசுங்க , இது என்னோட விஷயம் நீங்க ஓவரா பேசிட்டே போறீங்க எங்களுக்கு எப்டி இருக்கணும்னு தெரியும் பெருசா அட்வைஸ் பண்ணவந்துட்டீங்க, உங்க வேலை என்னமோ அதமட்டும் பாருங்க , என் விஷயத்துல தேவை இல்லாம தலையிட வேண்டாம் என்றாள் ரோகினி..
இந்தவார்த்தையை அவளிடம் முரளி எதிர்பார்க்கவில்லை . மேலும்
முரளி ஏதும் பேசமுடியாமல் அந்த வாலிபனையும் ரோகிணியையும் முறைத்தவாறே திரும்பினான்..
அந்த பையன முறைச்சு எதுக்கு இந்த புள்ளையே இப்புடி இருக்கு , இது அவங்க அண்ணனுக்கு தெரிஞ்ச பாவம் எவ்ளோ கஷ்டபடுவான் என்று மனதிற்குள்ளே புழுங்கிக்கொண்டே வீடு திரும்பினான்..

மறுநாள் வழக்கம்போல் தனது நண்பர்களுடன் அரட்டை அடிக்க மைதானம் சென்றான் . அங்கு தன் நண்பர்கள் அனைவரும் இருக்க குருவை நோக்கியது முரளியின் கண்கள் அவனிடம் சொன்னால் அவன் தங்கையை ஆத்திரத்தில் ஏதேனும் செய்துவிடுவானோ ?சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்தவாறே அவனை நோக்கி நடந்தான் அவனும் முரளியை கண்டு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்..

மாப்ள என்று முரளி பேச ஆரம்பிக்க குரு சட்டென முரளியின் சட்டையை பிடித்தான் ,
முரளி திகைப்புடன் அவனை நோக்கினான் ..
நேற்றே உன்ன தேடி வீட்டுக்கு வரலாம்னு நினச்சேன் அது நல்லா இருக்காதுன்னு தான் விட்டுட்டேன் என்றான் குரு .

மாப்ள சட்டையில இருந்து கைய எடு உங்கிட்ட நான் முக்கியமான விஷயம் சொல்லணும் என்றான் முரளி..

நீ ஒரு மயி........ம் சொல்லவேணாம் எல்லாம் எனக்கு தெரியும் நீயெல்லாம் மனுசனா என் தங்கச்சிய அசிங்கமா பேச நீ யாருடா என்று முரளியை தள்ளினான் குரு ..
அதை கண்ட அவர்களது நண்பர்கள் குருவை வந்து பிடித்தனர் ..
அவர்களின் நண்பன் ராஜா என்னடா குரு ஏன் இப்டி பண்ணுற அவன் உன் உயிர்நண்பன் டா என்றான் .

நண்பனா இவன் செஞ்சதுக்கு இவன கொல்லாம விடறதே தப்பு நண்பனாம் நண்பன் என்றான் குரு..
முரளிக்கு மனதில் உரைத்தது ரோகினி குருவிடம் தவறாக தன்னைப்பற்றி ஏதும் சொல்லியிருக்க நேர்ந்திருக்கலாம் என்று மனதில் நினைத்துகொண்டான்..

உடனே குரு நேத்து நீ என் தங்கசிகிட்ட என்ன லே பேசிருக்குற அவள பத்தி பொது இடம்னு பாக்காம அசிங்கமா பேசிருக்குற , ஒரு பொண்ணு ஒரு பையன் கிட்ட பேசினா தப்பா , என் தங்கையை பத்தி எனக்கு தெரியும் அவ ரொம்ப நல்லவ.நேத்து முழுசும் சாப்டாம அழுதுகிட்டே இருந்தா ..
அப்புறம் தான் விஷயம் தெரிஞ்சுது உனக்கு அக்கா தங்கச்சி இல்லன்னு என்னவேணும்னாலும் பேசுவியா , உனக்கு ஒரு தங்கச்சி இருந்து நான் அவள இப்புடி பேசினா உனக்கு தெரியும் ..
அவ உனக்கும் தங்கச்சி மாதிரிதான்னு கொஞ்சமாவது நினச்சு பாத்தியால நீ என்றான்...

அவள என் தங்கச்சி மாதிரி நினச்சதாலதான் நா அவ பேசின பேச்சுக்கு சும்மா திரும்பி வந்தேன் ,
என் தங்கச்சியா மட்டும் இருந்தா வெட்டிவீசிருபேன், என்ன ஏதுன்னு கேக்காம நண்பன பத்தி என்னனமோ பேசுற என்றான் முரளி .....

என் தங்கச்சி தப்பு பண்ணுறானு நீ சொல்லுறியா , அவ பொய் சொல்ல மாட்டா , கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அசிங்கமா பேசுற உன்ன கொன்னுடுவேன் என்றான் குரு ...

டேய் மச்சான் உன் தங்கச்சிய கொஞ்சம் கண்டிச்சு வை டா இல்லாட்டா நம்ம குடும்பத்துக்கு தான் அசிங்கம் என்றான் முரளி..

நீயெல்லாம் என் நண்பனே இல்ல உன் மூஞ்சில முழிக்குறதே பாவம் , என் தங்கையை பத்தி தப்ப பேசுற அவள எனக்கு தெரியும் உன்னதான் தெரியாம இருந்துட்டேன்.இனிமேல் நீ ஒரு வார்த்தை பேசினா நல்லா இருக்காது , நா என்ன செய்வேன்னு எனகே தெரியாது . இனிமேல் ப்ரெண்டு அது இதுன்னு சொல்லிக்கிட்டு என்கிட்டே வராத நடக்குறதே வேற என்றான் குரு..

டேய் மாப்புள ஆத்திரத்துல பேசுற வார்த்தைக்கு நல்லதுகெட்டது தெரியாது , நீ நிதானமா சிந்திசுருந்த இப்டி பேசிருக்க மாட்ட , உனக்கு ஒருநாள் என்ன நடந்துதுன்னு உண்மை தெரியும் அப்போ மச்சான்னு சொல்லிக்கிட்டு என்கிட்ட வருவ, அப்போ இதே வார்த்தை நான் உங்கிட்ட கேப்பேன் நீ நினச்சு பார்ப்ப . அப்போ நான் கண்டிப்பா உன் நண்பனா இருக்க மாட்டேன் , இனிமேல் உங்கிட்ட பேசுறதுக்கும் நான் தயாரா இல்ல . தயவு செஞ்சு நீ கிளம்பு என்றான் முரளி..

அப்புடி ஒரு நிலைமை கனவுல கூட வராதுடா , நீ சிந்திச்சு கூட பார்க்காத நான் ஏன்டா கிளம்பனும் நீ கிளம்பு என்றான் குரு .
முரளி அவனை முறைக்க என்னடா முறைக்குற?
என்று குரு முரளியை நெருங்கினான்.

இவ்ளோநேரம் உன்ன நண்பனா நினச்சதாலதான் நீ சட்டையை பிடிச்சு என்ன தள்ளிவிட்டபோதும் நான் பேசாம இருந்தேன் . உனக்கு மரியாதை அவ்ளோதான் ஒழுங்கா போயிடு இல்ல உதை வாங்கிக்கிட்டுதான் போவ என்று முரளி சொன்னதும் குரு அவன்மீது பாய்ந்தான்..

ஆத்திரத்தில் முரளி கன்னாபின்னாவென்று குருவை அடித்துவிட முகத்தில் இருந்து ரத்தம் வழிந்தது குருவுக்கு , நண்பர்கள் தடுக்க நினைக்கும் முன் இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டனர் ,

ஒருவழியாக இருவரையும் பிடித்து இழுத்து தடுத்து சண்டையாய் நிறுத்தினர் அவனது நண்பர்கள்..
குருவை நோக்கி சுரேஷ் ரத்தம் வருதுடா வாடா ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றான் . ஒரு மண்ணும் வேண்டாம் என்றான் குரு ...

உடன் ராஜா முரளியை இழுத்துக்கொண்டு வாடா என்று அருகே இருந்த கடைக்கு அழைத்து சென்று இதை குடி ஆத்திரம் அடங்கட்டும் என்று சோடாவை நீட்டினான் ...
வேண்டாம் மாப்புள நான் அவன எப்டி நினச்சேன் ஆனா அவன் என்னை அவன அடிக்கிற அளவுக்கு கொண்டுவந்துட்டான் நீயும் பார்துக்கிட்டுதானடா இருந்த என்றான் முரளி..

மாப்ள நானும் கேள்விப்பட்டேன் அந்த புள்ள ஒரு பையன்கூட சுத்துறதா, அத குரு கிட்ட சொன்னா அவன் நம்மதான் தப்பா நினைப்பான்னு எனக்கு தெரியும் அதான் நானும் விட்டுட்டேன் என்றான் ராஜா.
ஒரு பையனா இருந்தாகூட காதல்நு சொன்னா ஏதாவது பண்ணலாம் , ஆனா எனக்கு தெரிஞ்சு இது மூணாவது பையன் டா அதான் சொல்லவே கூசுது , அவன் குடும்பத்துக்கு இது தெரிஞ்சா பாவம் என்ன ஆகும்னு தெரியலையே டா .......

ஓகே விடுடா நடக்குறது நடக்கட்டும் , நீ அவன்கிட போயி ஏதும் பேசாத இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும் என ராஜா சொல்ல .

அவன் கிட்ட நான் பேசுறதா இல்ல , ஆனா அவன நினச்சா பாவமா இருக்குடா பொட்ட புள்ளைக்கு அதிகமா செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கி வச்சுருக்காங்கடா அந்த பொண்ணுகுதான் அது ஆபத்துல முடியும்னு தெரியல , அவள என் தங்கச்சியாதாண்டா நானும் நினச்சேன் , இவன் இப்புடி பேசுவான்னு நான் எதிர்பாக்கல சரி விடு நடக்குறது நடக்கட்டும் என்று இருவரும் கிளம்பினர் . அதன் பின்னர் முரளியும் குருவும் பேசுவது இல்லை , பரம வைரிகளாக கீரியும் பாம்பும் போல ஆகினர் , சில இடங்களில் பார்க்கும் நேரங்களில் முட்டிகொள்வதும் வழக்கமாகியது.

மாதங்கள் சென்றன , திடீரென ஒருநாள் குருவின் அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர் , தனது நண்பர்கள் சொல்லி முரளிக்கு விவரம் தெரிந்தது பார்க்க செல்லலாம் மனம் நினைக்க வேண்டாம் என்று மூளை சொல்லியது , அங்கு சென்றால் குருவுக்கு பிடிக்காமல் போகலாம் என்று நினைத்தான்.. இறுதியில் மனது வென்றது தனது நண்பன் ராஜாவுடன் மருத்துவமனைக்கு விரைந்தான் அங்கு குரு இல்லை , இவன் சென்று அவனது அப்பாவை கண்டுவிட்டு திரும்பினான் ,
சில வாரங்களுக்கு பிறகு தான் அவனது தாயார் சொல்லி குருவுக்கு முரளி வந்த விஷயம் தெரிந்தது . அவனுடன் பேசவேண்டும் என நினைத்தாலும் தான் பேசிய பேச்சை நினைத்து வேண்டாமென இருந்துவிட்டான்....

அவனது தந்தைக்கு மாரடைப்பு வந்ததன் காரணத்தை நினைத்து நொறுங்கி போயிருந்தான் ,
தனது தங்கையின் பேச்சை கேட்டு முரளியை திட்டியதை நினைத்து அன்றுதான் மிகவும் வருந்தி நின்றான்..
அவனது தங்கை அந்த வாலிபனிடம் தன் கற்பை பறிகொடுத்த விஷயம் அறிந்து அவன் தந்தைக்கு மாரடைப்பு வந்துவிட்டது . ஆத்திரம் தீர தன் தங்கையை அடித்து நொறுக்கினான் குரு , அவனது அம்மாவும் இந்த செய்தி அறிந்து நொறுங்கிவிட்டார்கள். அவனது வீடே இருள் சூழ்ந்தது போல இருந்தது... அவனது சித்தப்பா அந்த வாலிபனை பற்றி விசாரித்தபொழுது அவன் ஒரு மாதத்திற்கு முன்பே வெளியூர் சென்றதாக ரோகினி கூறினாள். விஷயம் வெளியில் கசிந்துவிட கூடாது என்பதற்காக யாரிடமும் ஏதும் கூறாமல் அந்த வாலிபனை தேட துவங்கினர் இறுதியில் நெல்லை அருகே இருப்பதாக தகவல் தெரிந்து அங்கு சென்று கண்டுபிடித்தனர்,
அவனுக்கு வேலை என்று ஏதும் இல்லை , அவனுக்கும் ஒரு தங்கை ,என்னால இப்போ கல்யாணம் பண்ண முடியாது என் தங்கைக்கு கல்யாணம் முடிச்சுட்டுதான் என் கல்யாணத்த பத்தி யோசிக்க முடியும் என்று அவன் கூறியதும் குருவுக்கு ஆத்திரம் வந்தது அவனது சித்தப்பா அவனை சமாதானபடுத்தி காலில் விழாத குறையாக சம்மதிக்க வைத்தார்..

குரு சித்தப்பாவிடம் ஏன் இப்புடி கெஞ்சுறீங்க அவன் தப்பு பண்ணிக்கிட்டு சாதரணமா பேசுறான் நாலு போட்டு வாடான்னு இழுத்துட்டு வந்துருக்கணும் என்று சொன்னான்.

டேய் அவன் மட்டும் தப்பு பண்ணல நம்ம பொண்ணுமேல தான் தப்பு , இப்போ அவன எதாவது பண்ணி போலீஸ் அது இதுன்னு போனா நாளைக்கு நம்ம பொண்ணுகுதான் அசிங்கம் , அப்பாவுக்கு இதையே தாங்க முடியாமல் மாரடைப்பு வந்துடுச்சு , இதுல குடும்பத்துக்கே கேவலம் வந்தா அவர் உயிரோட இருப்பாரா
அதாண்டா அவன்கிட்ட கெஞ்ச வேண்டியதா போச்சு , எல்லாம் வீட்டுல இருக்காளே அந்த பொட்ட சிறுக்கி அவள சொல்லணும் , அதிகமா செல்லம்கொடுத்து அவள நீங்கதான் சீரழிச்சு வச்சுருக்கீங்க அதன் இப்புடி நடந்துருக்கு என்று சித்தப்பா சொன்னதும் குருவுக்கு முரளியின் நினைவுதான் வந்தது..

விறுவிறுவென கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருந்தன , வேலை இல்லா ஒரு வெட்டி பயலுக்கு தங்கையை கல்யாணம் செய்துகொடுப்பதை நினைத்து வருந்தினாலும் , அவளாக தேடிய வாழ்வுதானே எப்படியும் நாசமாக போகட்டும் என்று விட்டுவிட்டான்.....

தன் சோகத்தை அடக்கமுடியாமல் தான் அன்று முரளியிடம் சென்று பேசிவிட்டான் ...

இதெல்லாம் நினைத்து பார்த்துகொண்டே வீடு சேர்ந்தான் குரு .....

அன்று இரவு முரளியை சந்தித்து நடந்த விவரங்களை எல்லாம் கூறினான் குரு. மன்னிச்சுடு மாப்ள நான் தப்பு பண்ணிட்டேன்டா நீ கட்டாயம் கல்யாணத்துக்கு வரணும்டா என குரு சொன்னதும்..
மாப்புள யார நம்பினாலும் நம்பாவிட்டாலும் நண்பனை நம்பனும் டா . நட்புக்கு நம்பிக்கை தான் முக்கியம் டா.நம்பிக்கை இல்லாத நட்பு நரகத்தை விட பயங்கரமானது .கல்யாணத்துக்கு மட்டும் கூப்பிடாத நான் கண்டிப்பா வரமாட்டேன் என்றான் முரளி மேலும் அவனிடம் பேசினால் அவன் வருந்துவான் என்று எழுந்தான் .

அப்பாக்கு உடம்பு சரி இல்லன்னு தெரிஞ்சதும் நீ ஓடிவந்து பார்த்த அதமாதிரி நீ கல்யாணத்துக்கும் கட்டாயம் வருவ எனக்கு தெரியும் என்றான் குரு.

சிறு புன்னகையை மட்டும் பதிலாய் தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் முரளி ..............

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா... (1-Feb-12, 8:45 pm)
பார்வை : 1567

மேலே