கலைசொல்லன் நன்றியுரை!!
மண்ணுலகிற்கு அறிமுகம் செய்து
மருத்துவனாய் ஏற்றிவிட்ட
தந்தைக்கும் தாய்க்கும் முதற்கண் நன்றி
கவியுலகிற்கு அறிமுகம் செய்து
கவிஞனாய் உயர்த்திவிட்ட
கவிஞர் இரவிக்கும் நன்றி
கவிதைகளைப் பாராட்டி
கருத்துகளை பகிர்ந்துகொண்ட
நண்பருக்கும் அன்பருக்கும் நன்றி
அறியாமல் பாதை தவறாதே என
அறிவுரை கூறிய
நட்புக்கும் உறவுக்கும் மிக்க நன்றி.
-கலைசொல்லன்

