அழகே! தமிழே!!...
அழகே தமிழே! ஆண்டுகள் ஐயாயிரம் கடந்தவளே!
இளமைத் தமிழே இனிமைத் தமிழே போற்றி!
கற்கால தமிழரை பண்படுத்தினாய் உன் பண்களால்!
கணினிகால தமிழரை உயர்த்தினாய் உன் வடிவால்!
உன்னை பெண்ணாக போற்றியதால்தானோ இன்னும்
அடக்கப் பட்டிருக்கிறாய் அடைக்கப் பட்டிருக்கிறாய்!
புதுமைப் பெண்ணாக புரசிப் பெண்ணாக புறப்படு
உலகை பண்படுத்த உன்னதத் தமிழே வாவா!!...