தாய் - சேய் ; ஓர் புனித உறவு
சேய்க்கு தாயின் தாலாட்டு
தாய்க்கு சேய்யின் பாராட்டு
- வரிகள் மட்டும்தான் இரண்டு,
ஒவ்வொருமுறையும் வார்த்தைகளைக்கோர்த்தும்,
வார்த்தைகளைப்பிரித்தும் படிக்கையில்,
வெவ்வேறு அர்த்தங்கள்;
ஒவ்வொரு அர்த்தமும்
இப்புனித உறவைப் போற்றுகிறது.