நாம திறப்போம்க நெற்றிக்கண்ணை .........
மனுஷன மனுஷனா பாக்கனும்ங்க
மனுஷ மலத்த மனுஷ அள்ளும் கொடும தீரனும்
நிலத்தில் உதிச்சதுங்கோ !மனித சாதி
அப்போ சாதி ஒன்னுதங்கோ !
குறுகுன புத்தி காரனெல்லா குறுக்கால வந்தாங்கோ !
நெறியில்லா சாதிய கண்டாங்கோ !
அன்பு ஒழிஞ்சு போச்சுங்கோ !
வம்பெல்லா வளந்து நிக்குதுங்கோ !
ஊருக்கு குறுக்கால சுவரெல்லா எழுப்புதாங்கோ !
மனித நேயத்த பறைசாற்ற
ஔவைய கூப்பிடு அழகா சொல்லுவா !
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோருன்னு!
சிவன் என்னடா நெற்றிக்கண்ணை திறக்குறது
நாம தெறப்போம் நெற்றிக்கண்ணை
நாடு வாழ ! நன்மை பெற !