நம்ம தொழில் நமக்கு தெய்வம்
மொச்சக் கொட்ட புளிக் கொழம்பு
மோந்து பாரு தூக்குச் சட்டியில்
தள தள தயிரும்தானே
இடுப்புலேதான் இருக்குதையா..
எறக்கி வச்சிட்டு கெளம்பு நீயி
நறுக்கி வெங்காயம் நானும் வைக்கணும்
ஜனக்கூட்டம் வந்துரும் வந்துரும்
சட்டுன்னு புட்டுன்னு நீயும் கெளம்பு
தெருக் கடைய தெளிச்சி கூட்டனும் நானு
எலய நறுக்கி பந்திலே போடணும்....
எடுபட்ட பய லஞ்சம் வாங்க வந்தா
எடுத்து நூறு கொடுக்கட்டுமா....?
கான்வெண்டு விட்டுருக்கும் நல்ல
கவனமா பாத்து பிள்ளைய கூட்டுவா...!
சாலையோர ப்ரோட்டாக் கட - நம்ம
சந்ததி தழைக்க பணம் கொடுக்கு......
ஒலப்ப நம்பிதானே பொழப்பே போயிட்டிருக்கு
நம்ம மகன் ஐ ஏ எஸ் படிச்சாலும்
நம்ம தொழில் நமக்கு தெய்வம்
இந்தக் கட கோயில்தானே...!