ஒரு இயந்திரம் புலம்புகிறது

எட்டுக் குட்டி போட்ட நாயே
எம்புட்டு நேரம் கத்துறே நீயி...?

என்னக் கட்டி புள்ள பெக்குற
எந்திரமா மாத்துனவன்......
தூக்கம் போயி எழுந்தான்னா
தொலைஞ்சேன் நான் தெரியாதா..?

ஏற்கனவே ரெண்டு மாச அஞ்சாவது
எப்படி எப்படி நெளியுதுன்னு
எட்டிப் பாரு தொட்டிலுக்குள்ளே...
ஏன்தான் நீயும் இப்படி கத்துதே..?

கொஞ்சம் கொஞ்சம் கொலைக்காதே
குறட்டை விட்டு அவன் தூங்கட்டும்

வத்திப் போச்சி எளமைஎல்லாம்.....
வாந்தி வருஷம் புல்லா எடுத்து....
வாக்கப் பட்டு பட்ட சொகத்தால்
வறுமைக் கோட்டில் நடக்கேன் நானு...!

எழுதியவர் : (6-Feb-12, 6:49 pm)
பார்வை : 270

மேலே