நட்பின் நிழல்

என்னிடம்
என்
நிழலைவிட நீ நெருங்கினாய்
என்
நினைவைவிட நீ தயங்கினாய்
விட்டுவிடு

கூடிபிழைக்கும் வாழ்க்கையில்
கூடிஅழும் நேரங்களில்
காகம் கரைந்தது
நம் பல்லவி

என்
காலடி தடத்திற்கு
என்
கணம் தெரியும்

காத்திருக்கும் பொழுதுகளில்
காரணம் என்ன தேவை

பிரியாத பொழுதேது
புரியாத பகை ஏது
அதுவா!நட்பு

பிரிந்தாலும்,புரிந்தாலும்
நீ
தனி மனிதன்.

அன்புடன்
நாகராஜன் சமுத்திரம்
ரெட்டைகுளம்

எழுதியவர் : நாகராஜன் சமுத்திரம் (6-Feb-12, 11:20 pm)
Tanglish : natpin nizhal
பார்வை : 496

மேலே