அந்த நாள்
செப் 11
இந்த தேதியை கேட்டாலே ..
என் முதுகு தண்டில் மின் வெட்டாய் ஒரு வலி உணர்கிறேன்....
2001 ...சிரிமியாய் அதை காணும் போது கூட ...
மனதில் அவ்வளவு வலிகள்...நெருடல்கள்
அன்னையின் மடியில் முகம் புதைந்து விம்மிய வண்ணமாய் ...
கவலை ரேகைகள் முகத்தில் படிந்த என் தந்தையிடம் கேட்டேன்..
ஏம்பா ...இப்டி நடக்குது ...நெறைய பேரு செத்து பொய் இருப்பாங்கல்ல???
வினவிய என் வினாவுக்கு ...விடை இல்லாதவராக...
அதே கவலை தொணிந்த தோனியில்...
இதெல்லாம் ஒரு நாள் சரி ஆய்டும்மா ...என்றார்..
இன்று வரையில் அந்த நாளை எதிர்நோக்கி பயணிக்கிறேன்....
சில நேரத்தில....
என் மனதின் பின்னணியில்...
AR ரஹ்மான் இசையில் இந்த பாடல் மெய்யாகும் நப்பாசையுடன் ...
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே....
முனுமுனுதுக்கொண்டு இருப்பேன் ....