அவன் முதல் அவள் வரை
பிறக்கும் போது
அழுதே பிறந்தேன்....
அரவணைக்கும் தாயின்
மடியில் தான் வளர்ந்தேன்......
வளரும் போது தெரியவில்லை - நான்
வளர்ப்பிறையா ? - இல்லை
தேயிப்பிறையா ?
காலம் கடந்ததும் -நான்
காலவதியாகி விட்டேன் ....
காணும் யாவரும் - என்னை
கரும்புள்ளியாய் பார்த்தார்கள் .....
ஆசைகளை வளரவிட்டு
மீசைகளை தளர விட்டேன்
அதை style என்று
தாய் கண்டுகொள்ளவில்லை .....
கல்லூரி சென்றேன்
காது குத்தி கம்பல் போட்டேன் ....
fashion என்று தந்தையும் மறுக்கவில்லை ......
பேசுவதை நிறுத்தி விட்டேன்
தனிமைக்கு என்னை
தத்து கொடுத்தேன் .....
மஞ்சள் பிடிக்கிறது....
மலர்கள் பிடிக்கிறது .....
நான்கு சுவர்களுக்குள்
சேலை கட்டி
அழகு பார்த்தேன் ......
குங்குமம் பிடிக்கிறது....
கால் கொலுசு பிடிக்கிறது....
நான் இந்திரனா ? -இல்லை
ஊர்வசியா ?
எனக்குள் கேள்விகள்
பல கேட்டேன் ....
இரண்டும் இல்லை என்று
என்னையே என் மனம்
குழப்பியது ......
பின்பு தெளிவானேன் ....
பிழை என்பது
அனைவருக்கும் வருவதுதான் !
ஆனால்
இறைவனே பிழை செய்தது
என்பதுதான் கொடுமை ......
ஆம் அவன் செய்த பிழையாய் -நான்
அரவாணியாய் மாறினேன்
நான் இன்று
அவனா ? -இல்லை
அவளா ? -என்று
விடை தேடினேன்......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
