அம்மாவின் முதல் ஆகாய பயணம்

கேப்பகளி சோள சோறும்
உண்டபின்னே உறக்கமில்லா
விடியலோடு புறப்பட்டு
வயகாட்ட பாக்கணுமே

அந்திவேள நேரத்துல
அங்கே பாரு வானத்துல
ஏரோப்ளேன் போகுதுன்னும்
எம் . ஜி . ஆர் அதுலதா போறங்கன்னு
அம்மா சொன்னியே

பஸ்ல போயிருகோம்
ரயிலையும் போயிருகோம்
அந்த ஏரோப்ளேன் - ல போகமுடியுமா
என எண்ணிக்கூட பார்த்ததில்ல

அறிவியலுக்கு படிச்சபுள்ள
ஆசையா கூட்டி வந்தேன் ஏரோப்ளேன்க்கு
அள் யாருன்னு தெரியாது
ஆனாலும் கேட்டுகொண்டான்
அய்யா எங்கம்மாக்கு சன்னலோரம் இடம் கொடுங்க
அம்மா உன்ன பார்த்ததுமே
அய்யா அவருக்கு தெரிந்ததுவோ

சன்னலோரம் ஓட்டிகிட்ட
அப்போ அப்போ கேட்டுகிட்டே
வண்டி எப்போ புறப்படுமனு
மேலே ஏறும்போது கண்ண மூடிகிட்ட
அடி வயறு கலந்குதுன்னும் கத்திபுட்ட

சின்ன புள்ள கூச்சமது
முதல் முதல பார்த்தேன் நானு
எட்டி எட்டி பார்த்து நீயும்
இதுதானா ஏரோப்ளேன்னு
உச்சிகொட்டி பேசைல
உள்ளம் அது தெரயுதம்மா

வெண்மேகம் இதுதான்னு
அதிசயமா பார்த்த நீயும்
ஏரோப்ளேன் போகலையே
அப்படியே நிக்கிதுன்ன
சின்ன புள்ள கேள்வி கேட்டு
ந திணறித போனேனம்மா

தரைல போனா வேகம் தெரியும்
தன்னியல போனா தூரம் தெரியும்
வானத்துல போறவளே
வரைமுறை தெரியாதம்மா

தண்ணி பாரு தெரயுதுன்ன
தரைய பாரு தெரயுதுன்ன
மாட மாளிக கோபுரம்மேல்லாம்
மன்சட்டி போல தெரயுதுன்ன

குழந்தை-ன் மடிய்லே
குழந்தையாகி போனதென்ன
இறங்கும்போதும் பயபடுறியே
சாய சாய சினுங்கரிய

அதுக்குள்ளே வந்துட்டோமா
அடியாத்தி இது நல்லாருக்கே
அஞ்சாறு பொட்டி சேர்த்த என்ன
ஏலசனம் எவளோ இருக்கு
கூட்டி வந்த என்ன
உன் கேள்விக்கி சிரிப்பு வருதம்மா
ஆனாலும் அதிக விலை அப்படிதமா

பெரிய பஸ்சு போலதா இருக்குது
இந்த ஏரோப்ளேன்னு
அது தரைல போகுது
இது வானத்துல மிதக்குதுன்னு
விளக்கம் சொன்ன

பட்டிகாட்டு பட்டு பூவே
இத்தனைதூரம் அழைத்து வந்து
இப்படி உன்ன கூட்டி போறேன்
என்ன சொல்ல என் மனம் அடையும் பூரிப்ப

குப்பதா, காளியம்மா , சின்னபொண்ணு
அத்தன பேரும் கேட்குமுன்னே
அத்தனையும் சொல்லிபுட்ட
ஏரோப்ளேன் இதுதான்னு
அக்கு வேற ஆணி வேற பிரிச்சிபுட்ட..
அவளோ சந்தோசம் நிரஞ்சிடுச்சோ..

அப்பா அடுத்த முறை
எப்ப போலாம் ஏரோப்ளேன்ல ..

எழுதியவர் : jagadeeshwaran (6-Feb-12, 7:44 pm)
பார்வை : 407

மேலே