மழைக் காதல்

மண்ணிலே பிறந்த காதல்
விண்ணிலே மலர்ந்ததும் மோதல் ......

மேகங்கள் மோகம் கொண்டு
முத்தமிட்டு கொண்டன .......
முத்தம் சத்தம் கேட்டதும்
மின்னலோ விண்ணிலே
விழித்துக் கொண்டன ....

இளங்காற்றோ பொறமை கொண்டன ....
இளம் ஜோடியை பிரித்து மகிழ்ந்தன ....

மேக கண்ணீரோ மழையாய் மாறியது
மேகம் உயிர் உருகி ஒன்றாய் கலந்தது ....

கடலில் கலந்து கொண்டதும்
காதல் பிறந்தது மிண்டும் ....

அழியாதது காதல் அழியாதது.....

இனி தொடரும் இந்த
முத்தசத்தம் அலையினிலே...
வியந்து நின்ற மீன்களோ
மாட்டிக்கொள்ளும் வலையினிலே...

காலகாலமாய் வாழ வேண்டும்
இந்த காதல்
என்றும் விண்ணிலே
தொடரவேண்டும் மோதல் .....

எழுதியவர் : கவிஞர் : ஜெ.மகேஷ் (3-Feb-12, 7:11 pm)
சேர்த்தது : jgmagesh
Tanglish : mazhaik kaadhal
பார்வை : 190

மேலே