அம்மா

உன் அன்னையை
தலைவணங்கு தினமே -இல்லை
உன்னையே
தலைமுழ்கு மனமே !

உயிர் எழுத்துகளில்
முதன்மையானவள் அன்னை -அவள்
உயிரை உருக்கி
உருவாக்கினால் உன்னை !

பத்துமாதம்
சுமந்தாளே அன்னை -உடலில்
பாரம் என்று
பெற்றாளா உன்னை !

பாலை ஊட்டி
வளர்ப்பவள் அன்னை -மற்றோர்
பழித்துப் பேச
நினைப்பாளா உன்னை !

சிறுக்கனவுகளை கூட
நிஜமாக்குவாள் அன்னை -அந்த
சிகரத்தைப் போல்
உயர வைப்பாள் உன்னை !

சிறகைப் போல் இருப்பாள்
அன்னை உன்னிலே - அந்த
சிறகே இல்லை என்றால்
நீ பரப்பாயா விண்ணிலே !

அறிவாயா மனமே இதை
அறிவாயா மனமே- இனி
அறிந்த பின்னாவது
மாறுமா உன் குணமே !

அன்பின் உருவே
உன் அன்னை -என்றும்
அன்னைக்கு செய்திடு
நீ ஆராதனை ....

எழுதியவர் : கவிஞர் : ஜெ.மகேஷ் (3-Feb-12, 5:17 pm)
Tanglish : amma
பார்வை : 347

மேலே