ஏனடி கஞ்சத்தனம் !!!

காதலில் ஏனடி கஞ்சத்தனம் !!!
காதலனின் கடைசி கரண்சி வரைமட்டும் உயிர்வாழும் ...
கேட்டால் ... உண்மைக்காதலாம் !!!

ஆடையில் ஏனடி கஞ்சத்தனம் !!!
ஐந்தடி உடம்பிற்கு அரை ஜான் போதுமாம் ...
கேட்டால் ...நாகரிக வளர்ச்சியாம்
ஆனால் ... ஆடைக்கோ வரட்ச்சிதான் !!!

சிரிப்பதில் ஏனடி கஞ்சத்தனம் !!!
ஐயையோ இன்று அதிகமாய் சிரித்துவிட்டேனே நாளை அழவேண்டி வருமோ ???
கேள்விக்குள் தொலைந்துவிடும் சிரிப்பு !!!

முயற்ச்சியில் ஏனடி கஞ்சத்தனம் !!!
முக்கால் தூரத்திலேயே மூக்காலழுகிறாயே...
முன்னேறு முழுமூச்சுடன் ...
வெற்றி உன் காலடியில் !!!

கற்பனைக்கு ஏனடி கஞ்சத்தனம் !!!
விரித்துவிடு சிறகை விண்ணைத்தொடட்டும் !!!!

-அமலா

எழுதியவர் : amala (10-Feb-12, 12:57 am)
பார்வை : 230

மேலே