ஒரு விதிக்கப்பட்ட அபலை............................
வசதி குறைவானாலும் வறுமைக்கோடு
தீண்டாத குளத்தில் பிறந்த அவள்...
ஒற்றை செல்லம் என்பதால்
அனைத்தும் வழங்கினர்
அவளது பெற்றோரும் வேண்டியதை.......
பூப்பெய்தவுடன் தளிராய் முளைத்த................
பருக்காதல்லால் பரிதவித்தாள் ..............
தனங்கள் சூழ்ந்துதிருப்பினும்
தன்னிலை மறக்காத காதலன்.....
ஏற்காத சமுதாயமும் ,ஒத்துக்குலாத குடும்பமும்.
நல்ல காதலை வாழவைக்க ...
நடு இரவில் வண்டி ஏறினர் இருவரும்...
திசைகளும்தெரியவில்லை,செய்வதும் அறியவில்லை..
அறியாத மனிதர்களிடையே அவனும் பெற்றான்
அன்றாட தின குலி வேலையை....
நிலவு தெரியுமளவுக்கு குடிலாக இருப்பினும்...
நிறைந்த மனதுடன் இருவரும்..
வளர்த்த காதல் வடிவம் கொண்டது ..
அவளது வயிற்றில் ....
பிரசவம் நேரத்தில் பிரளையமாய்
நடந்தது கணவனின் விபத்து ....
விஷயம் கேட்டு விரைந்தாள்
சம்பம் நடந்த இடத்துக்கு..............
மடியில் மரணத்துக்கு போராடும் கணவன்...
மடிக்குள் ஜனனத்துக்கு துடிக்கும் சிசு..
செய்வதுதரியாது சரிந்தால் மயங்கி....
விழித்த போது இடதுகாதில் கேட்டது
பிறந்தது பெண் குழந்தை என்றும் ............
வலது காதில் கேட்டது
இறந்து உனது கணவன்தான் என்றும் ....
தகனத்துக்காக தரைவார்த்தல் தாலியை..
எறிந்து கொண்டிருக்கும் சிதைக்குமுன்
சிந்தித்து கொண்டிருந்தாள் கைக்குழந்தையுடன்..
"இவையாவும் தான் செய்த காதலின் பிழையா அல்லது தன்னை செய்த கடவுளின் பிழையா .."
சிந்திக்கும் போதே செவியில் கேட்டது
காதலன் வீட்டார் கொடுத்த கடத்தல் வழக்கு.
மறைந்து வாழ நினைத்தால் தான் மடியில் வளர்த்த மழலைக்காக ...
பாவிமகள் ஒழிந்ததோ பாழடைந்த மண்டபம்..
பட்சிலன் குழந்தைக்கு பட்டினியால் பாலுமில்லை
கடுங்குளிர் என்பதால் குழந்தையை சுற்றி
அங்கேயே வைத்துவிட்டு ..
காடுகள் கடந்து சென்றால் கால் புட்டி பாலுக்காக
தட்டினால் ஒவ்வொரு கதவையும்...
திறக்கவில்லை....
திறந்த கதவுகளெல்லாம் தயங்காமல் கேட்டன .
அவளின் தார்மிக கர்ப்பை.....
அலைந்து அழுத்த பின்பு
அதையும் விற்றால் ஒரு அல்ப கதவிடம்..
கற்பை விற்ற காசில் கால்புட்டி பாலுடன்..
மீண்டும் வந்தால் குழந்தை இடம்...
அங்கே பாம்பும், புராணம் குட
பாதுகாதுக்கொண்டிருதனர்
பிஞ்சு குழந்தையின் அழுகை கேட்டு..
கிடைத்த பாலை நிறைத்தால்
வெடித்த குழந்தையின் உதடுகளில்.....
"ஆனந்தகண்ணிருடன் ஏற்றுக்கொண்டால்
அனைவரும் அன்போடு கொடுத்த
வேசி என்ற பட்டத்தை"
............நட்புடன் சத்யா.....
.