ஒரு பெண்ணின் சோகம்
(ஒரு பெண்ணின் சோகம்)
எரியும் தீயோ என்னவனின் முக ம்……
உன் கரம் தொட்டதால்-
காதல் கடல் கண்டேன் காதலா
கண் விழிக்காமல் உன்னை கண்டேன் அது தான் காதலா ?
உன்னால் -
உறக்கம் தொலைத்தேன்
உணவை தவிர்த்தேன் !
உன்னோடு பழகிய நாட்கள்-
உண்மை தான் காதலா !
உன்னை என் உலகம் என கருதியதும்
உண்மை தான் காதலா!
உன்னை பிரிந்ததால் - இப்போது
உயிர் உள்ள பிணமாகி-
உருகி கொண்டிருப்பதும் உண்மை தான் என் காதலா !!
வாழ்கை சாலையில்
வழி தெரியாமல் வாழ்ந்தவள் நான்
ஒளியாக வந்தாய்!
வழியாகி நின்றாய் !!;
உந்தன் பாசத்திற்கு நான்
என்றும் அடிமை என் காதலா !!
நான் உன்னை பிரிந்தால் இறப்பாய் என்றாய்
உன்னை பிரியா விட்டால் இறப்போம்-
என்றார்கள் என் பெற்றோர்கள் !!
எனக்காக யாரும் உயிர் விடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது
எனவே ஏற்றுகொள் “என்னை ” என்றுவிட்டேன் -
“எமதர்மனிடம் ”
என் பிணத்தை பார்த்து
என்னவன் அழுவதை என்னால்
பார்க்க இயலாது;
ஆதலால்-
என் கண்களை முதலில் மூடிவிடுங்கள் !!
உன்னோடு வர இயழாததால்
எமனோடு சென்றுவிட்டேன் !
ஏமாற்றி விட்டேன் என்று -
எண்ணிவிடாதே காதலா
ஏமாந்து போனது நான் தான்!!!
என் உடல் எறியும் தீயில் என்னவனின் முகம்..