சோக பயணம் முடிவது எப்போது ??

கண்ணீர் கவிதைகள் :



சோக பயணம் முடிவது எப்போது ??



காதல் பேசிய

கண்கள்

இப்போது -

கண்ணீர் குளத்தில் கவலைகிடமாய் ;



மோகத்தோடு முத்தம் பதித்த இடங்களில்

இப்போது -

சோக சுவடுகள் ;



பூக்கரம் பிடித்த கரங்களில்

ரத்த வாசனை ;



உரிமையோடு ஊடல் கொண்ட உன்னிடம்

ஊமையாய் நின்றது

என் உண்மை காதல் !



பூக்கள் படர்ந்த என் மார்பில் – இன்று

ரத்த சுவடுகள் ! !



உன் மார்பு பகுதியின் நடுவில்

மண்டியிட்டு

மகிழ்ந்து பருகிய – உன்

வியர்வை துளிகளின் நினைவு

என்னில் ரத்த துளிகளை சிந்த செய்கின்றது ;



காதல் மனம் வாடியதால் –

என் வீட்டு பூக்களும் மனம் வீச மறுக்கின்றன



தறி கெட்டு ஓடிய ரத்த ஓட்டம்

இப்போது –

ரத்த நாளங்கள் -

ரத்த குழாய் உடையும் அளவிற்கு

உணர்வை வெளிபடுதுகின்றன !!



பிரியா உன்னிடம்

பிணைய கைதியாக இருந்தேன்

பிரிந்து விட்டதும் “விடுதலை என்று நினைத்திருந்தேன்

அது தான் என் மரண தண்டனை என்று தெரியாமல் ! !

எழுதியவர் : ansari (17-Feb-12, 8:06 am)
பார்வை : 536

மேலே