எம் தாய்மொழி

இசைக்கு ஏற்றார் போல்
இசைந்து செல்லும் வார்த்தைகள்.
பசை கொண்டு ஒட்டியது போல்
பதிந்து விடும் அர்த்தங்கள்.

இனிமை ஒன்றையே ஏந்தி வரும்
இயல்பில் கனியான எம் தாய்மொழி,
இனியும் செழித்திருக்க
அறிவியல் வளர்ச்சியோ டிணைந்து,
அதிகமாய் வளர வேண்டும்

எழுதியவர் : சித. அருணாசலம் (4-Sep-10, 11:26 am)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : yem thaaimozhi
பார்வை : 722

மேலே