ஒரு சிறப்புக் கருத்து ----கவின் சாரலன்

கவிதை இரண்டாம் கண்ணியில்


"அவர் ஊனுடன் உயிருடன் கலந்து


இறைவன் அங்கு நிற்கின்றான் "


கருத்துநன்று உழைப்பின் உயர்வை


சொல்லியிருகிறீர்கள்


வீட்டை தூய்மை படுத்தி தீபம்


ஏற்றி தினம் பாமாலை பாடுவது


பைத்தியகாரத் தனமா ? புரியவில்லையே . முதல் கண்ணியை


இப்படி அமைத்திருந்தால்


.......


ஊனக் கண்களால் விழித்து நோக்கினால்


இறைவன் தெரிய மாட்டான்


ஞானக் கண்களால் உள்ளேபார்


இறைவன் அங்கு இருகின்றான் "


ஒரு ஞானக் கவிதை ஆகி இருக்கும் .பக்த்தன் இறைவனை


பித்தா பிறை சூடி என்றுதான் போற்றுகிறான் அபிராமி பட்டர்


சொல்லுவார்


" முன் சொன்னவெல்லாம் தரும்


பித்தர் ஆவரென்றால் அபிராமி


சமயம் நன்றே "


ஆறாம் அறிவு அரை வேக்காடுகளின்


ஆனந்தக் கும்மியில் அகம் மகிழ்ந்து


போய் இறை நினைப்பை குறை கூறுதல்


அழகல்லவே அன்புக் கவி சினேகிதி


அமுதா அம்மு . நான் போற்றும்


கவிஞரின் கவிதை வரிகள் உங்களுக்காக


"பஞ்சை போட்டு நெருப்பை அணைப்பவன்


பைத்தியக்காரனடா


பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன்


பச்சை மடையனடா


நெஞ்சுக்கு நீதி உரைத்தே வாழ்பவன்


நிச்சயம் இறைவனடா


நல்ல நேர்மையிலும் உடல் வேர்வையிலும் தினம் வாழ்பவன்


மனிதனடா "


----அன்புடன்,கவின் சாரலன்


கவிக் குறிப்பு : கவி சினேகிதி அமுதா அம்முவின்
இறைவன் எங்கே இருக்கிறான் .....என்ற
கவிதைக்குத் தெரிவித்த கருத்து

எழுதியவர் : கவின் சாரலன் (22-Feb-12, 4:29 pm)
பார்வை : 478

மேலே