பார்வை

மெல்லிய சாம்பற்படிவாய்
கொட்டுகிறது மழை...
வயல்,
ஓரங்களில் தயிர்வளை
பறக்கிற கொக்கு, குடையுடன் மனிதரும்
மெல்லிய சாம்பலின் படிவாய்...
காற்று வீச்சில்
வெண் முத்தென முகம் நனைத்த நீரொடு
அழுவது உன் குரலா...?
போ
போவதுமில்லை...
பின்னர் வா
வருதலுமில்லை...
கொட்டுகிறது மழை
மெல்லிய சாம்பற் படிவாய்..