பொய் நிழல்கள்
பொக்கிசமாகவே
சேமித்தேன் வார்த்தைகளின்
மிச்சமெல்லாம்
அமுது என்று எண்ணியே
குடித்தேன்
விழிகளெல்லாம் விஷம்
வடிவதுகூடத்தெரியாமல்
அன்மான உள்ளங்களை
படைத்து என் அழுக்காக்கினாய்
இறைவா,,,,
என் நாட்களில்
உன்னை தேடிவந்த
நிமிடங்கள்தான் அதிகம்
மனசு விட்டுச்சிதறிய
கனவுகளெல்லாம்
கொட்டு வைக்க வேண்டும்
தாயின் மடி மீது,,,,,,
இளமையின் விளிம்பிலே
உணர்வுகள் தொலைத்து
தடிக்கி விழுந்த
தடவைகள் கோடி,,,,,
விழிகளுக்கு திரையிட்டு
தூர நின்று நலம் விசாரித்த
அவர்களை,
உடைந்த மனசு இன்னுமே
உயிரோடு கோர்க்கிறது
வானம் கிழித்து
வாழ்கை பற்றி
வரைந்து முடித்தேன்
கசிந்து போன கனவுகள்
கதவை உடைத்துப்போனாது
தொப்புள் கொடியோடு தொடங்கிய
ஊமைக்கனவுகள்
கொஞ்சமும் சிரிக்காமலே
சிதறிப்போனது
அந்த நொடிகளெல்லாம்
நிஜங்களாகவே நெஞ்சை
துளைக்கும் நினைவுகளோடு
அவர்களும்
பொய் நிழல்களாகவே என்னோடு
வாழ்கிறார்கள்,,,,

