நகைச்சுவை துணுக்குகள் .....

"அந்த பணக்காரர் வீட்டில் மூன்று நீச்சல் குளங்கள் இருக்கின்றன.
ஒன்றில் சுடு தண்ணீர் மற்றொன்றில் பச்சை தண்ணீர்..." "அப்போ மூன்றாவதில்...?" "காலியாக இருக்கும். அது தண்ணீர் என்றால் பயப்படுகிறவர்களுக்கு."


"அது என்ன டெய்லி பெப்சி பாட்டில்ல தண்ணி ஊத்துங்கன்னு பிச்சை எடுக்கும்போது சொல்லிட்டுப் போற?"
"நான்தான் அதிக தெருவுல பிச்சை எடுக்கறேன்னு பெப்சி கம்பெனி என்னை 'பிராண்ட் அம்பாசடரா' அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்க சாமி!"


"நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" "போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்."


மனைவி: "ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "
கணவன்: நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."


மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணு பார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான் அவன்!!


மனைவி: என்னங்க, அதோ குடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே போறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு!
கணவன்: அவன் கொடுத்து வச்சவன், அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னுதான் ஆச்சர்யமா இருக்கு!


"ஏன் சோகமாக இருக்கிறாய்?"
"என் மனைவி வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்"
"அதற்காக நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?"
"என் மனைவி எனக்கு அல்லவா வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள்."


மனைவியை தொலைத்த ரெண்டு நபர்: "உங்க மனைவி எப்படி இருப்பாங்க?" "ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா." "உங்க மனைவி?"
"அவளை எதுக்கு தேடிக்கிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்...."


அப்பா: புள்ளையாடா நீ! எல்லா பாடத்திலேயும் ஃபெயில், இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத! மகன்: சரி மச்சி! ஓவரா சீன் போடாம சைன் போடு.


"உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..?"
"சாயந்திரமானா சமையல் வேலைகளைக்கூட கவனிக்காம மெகா சீரியல் பாக்க ஆரம்பிச்சுடறாரு டாக்டர்!"


"டாக்டர், என் மனைவி தினமும் தூக்கத்துல எழுந்து நடக்கறா..."
"இதுக்குப்போய் நீங்க ஏன் கவலைப்படறீங்க..?"
"தனியா நடக்க பயமா இருக்குன்னு என்னையும் எழுப்பிடறா டாக்டர்!"


"எதுக்கு நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க....?"
"வசதிப்பட்ட இடத்துல படுத்துத் தூங்கச்சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...!"


செ.சத்யா செந்தில், தமிழ் முதலாம் ஆண்டு. மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (29-Feb-12, 5:30 pm)
பார்வை : 1569

சிறந்த நகைச்சுவைகள்

மேலே