விழியின் வெளிச்சம் கண்டு

விடிந்து கதிரோன் வணக்கம் என்றான்
கனிந்து காய்களும் கவிதை சொன்னது
மலர்ந்து அரும்பும் மகிழ்ச்சி என்றது
மனமுவந்து யாவரும் புன்னகை சிந்தினர்

பார்க்கும் திசை எங்கும் பாராட்டும் உள்ளங்கள்
தோற்கும் நிலை இங்கே யார்க்கும் இல்லையே
தீர்க்கும் துயரம் இனி உழைக்கும் நொடிகளே
வேர்க்கும் தோல்விக்கும் - பயந்து ஓடுமே....!

சிகரம் தொட சீக்கிரம் வாருங்கள்
சிரித்தபடி நாமும் செல்லலாம்....
பின்னி விரல் சேர்ந்தே வாருங்கள்
பறந்தபடி வானில் மிதக்கலாம்

வெற்றி ஒன்றும் தூரம் இல்லை
வேதனைக்கு நேரம் இல்லை - நம்
விழியின் வெளிச்சம் கண்டு - இனி
விடிந்து விழிக்கட்டும் உலகம் தினமும்..!

எழுதியவர் : (2-Mar-12, 8:43 am)
பார்வை : 1584

மேலே