தீவில் குவிக்கணும் கண்ணிவெடி
உன் அரசவையில் அநீதியா - அங்கே
அழுவதுதான் உன் ஆவீயா?
திறமை என்பதுதான் உன் மீதியா !
திரும்பும் திசைகளே உன் பாதியா?
கரைதொடத்தான் இறங்கி விட்டாய் கடலுக்குள்ளே
கார்மேகம் திறந்து விட்டாய் புதிருக்குள்ளே
இருக்கட்டும் இசைகளும் உன் அவைகுள்ளே
இலங்கட்டும் வசைகளும் உன் தசைகுள்ளே
தட்டி பறிக்கின்ற காற்றுதானே
தழுவும் சுவாசம் தருவதுபோல்
எட்டி உதைகின்ற ஏளனத்தை
ஏற்று பொறுக்கணும் தாங்கிகொள்
சுற்றம் துறந்திடும் பாசத்தையே சும்மா
சுவரில்லா சித்திரத்தை
கற்றவித்தை மறந்துதான் கண்ணீரா
காவலா நீதானே நாளை மன்னன்
போற்றும் பொன் உந்தன் காலடியில்
புரளும் தமிழந்த நாலடியில்
சேற்றை மறகாதே தாமரையே
செந்நீர் வடிகாதே சிந்தைகுள்ளே
நாளை நம் போகும் காலடியில்
நம் முன் வருவார்கள் நல்லவர்கள் - சால
தருகின்ற செங்கோலை நல்ல
தர்மம் நிலைநாட்ட பெற்றுடுவாய்
வீரம் செறிக்கின்ற காளைகளை நல்ல
வினை முடிக்க கற்றுத்தந்து
பொழுதில் நிலா அதை கூட்டி வர
போரை தொடங்கிவிடு தமிழ் மன்னா
ஈழ குரல் ஒடுக்கும் இலங்கையிலே
என்றும் சிவக்கின்ற இரத்தத்திலே - வீழ
இருக்கின்ற தமிழனுக்கும் நல்ல வேள்வி
இலக்கினை கொணர்ந்து தந்து - சாகும்
சிங்கள சகோதரத்துவத்தை சமர்த்தாய்
சமத்துவம் நீயும் பேசி
பாழும் வன்முறை தொலைத்துவிட்டு
பணிகள் பெற்றுவிட்ட உற்சாகத்தில்
தீவில் குவிக்கணும் கண்ணிவெடி
தினமும் வெடிக்கணும் நல்லபடி
ஆணை இடு ஓலை இடு என் மன்னா
அழுங்குரல் துன்பமில்லை என் மன்னா !