முதியோர் இல்லமும் ,உள்ளமும் .

அது ஒரு முதியோர் இல்லம். சதா சிவம் தாத்தா அந்த காலை வேளையில் முற்றத்திலுள்ள வேப்பமர நிழலில் உட்கார்ந்த படி கைகளை முழங்கால்களின் மீது முட்டுக்கொடுத்து முகம் புதைத்து ஏதோ கனவுலகில்உட்கார்ந்திருக்கிறார்.
அவருடைய எண்ணங்கள் இருபது வருடங்கள் பின்னோக்கி செல்கிறது.
என்னங்க நம்ம சாம்பசிவம் எம் பி ஏ முடிச்சி நல்ல வேலையிலும் சேர்ந்துட்டான் . அவனுக்கு ஒரு வாழ்க்கையை நாம தான் அமைச்சி கொடுக்கணும் . நல்ல ஒரு வரன பாருங்க .சீக்கிரமா அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிபாக்கனுமுண்ணு ரொம்ப ஆசையா இருக்கு.
ஆமா சீதா , நானும் அதத்தான் யோசிசிக்கிட்டிருக்கிறேன் .என்னோட நண்பன் ஒருத்தன் ஒரு நல்ல வரன் இருக்கிறதா சொல்லி இருக்கான் . நாளைக்கே அவன பாத்து
விசாரிச்சிட்டு வந்திர்றேன்.
அடுத்த நாள் சதாசிவம் பக்கத்து ஊருல இருக்கிற தன் நண்பன பாக்க போகிறார். நண்பன் அவரை பொண்ணு வீட்டுக்கு அழைச்சிட்டு போகிறார். சதாசிவம் பொண்ண பாக்கிறார். பொண்ணு தன் மகனுக்கு ஏற்ற ஜோடியாக தெரிகிறது. பெண்ணின் போட்டோவையும் ஜாதகத்தையும் வாங்கிட்டு குடும்பத்தோட வந்து பாக்கிறதா சொல்லிட்டு நண்பனிடம் விடை பெற்று ஊருக்கு வந்து சேருகிறார்.
சீதாம்மா பொண்ணோட போட்டோவ பாத்துட்டு ரொம்ப அழகா இருக்கா. ஒடனே போய் ஜோசியர பாத்துட்டு வாங்க . ஜாதகம் பொருத்தமா இருந்தா கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாளா குறிச்சி வாங்கிட்டு வாங்க.
ஜாதகமும் பொருந்தி இருக்க சாம்பசிவனுக்கும் பொண்ணு புடிச்சிருக்க கல்யாணத்துக்கு தேதி குறிச்சி கல்யாணமும் ஜாம் ஜாம் என்று முடிந்து விட்டது.
சதாசிவமும் ,சீதாம்மாவும் இனி நம்மள ஒரு குறையுமில்லாம மகன் பாத்துக்கிருவான் என்று சந்தோஷமாக இருக்கும்போது அந்த பேரிடி வந்து இறங்கியது.
ஆமாம். , சாம்பசிவன் அம்மாவிடம் வந்து ,அம்மா நம்ம வீடு சின்னதா இருக்கிறதால சரண்யாவுக்கு ப்ரைவசி இல்லையாம் . அதனால அவங்க வீடு எல்லா வசதியும் இருக்கிறதனாலயும் அவங்க அப்பா அம்மா மட்டுந்தான் அவ்வளவு பெரிய வீட்டுல இருக்கிறதாலையும் அது எங்களுக்கு வசதியா இருக்குமின்னு feel பண்ராம்மா. நீதான் அப்பாக்கிட்ட சொல்லி பெர்மிஷன் வாங்கித்தரணும் . நாங்க அடிக்கடி ஒங்கள வந்து பாத்துகிருவோம்மா .
சாம்பசிவன் இப்படி ஒரு குண்டத்தூக்கி
போடுவான்னு சீதாம்மா கொஞ்சங்கூட நினைக்கல. நெனச்சதுக்கு மாறா கடவுள் ஏன் இப்படி ஒரு சோதனையை வச்சான் . அவருக்கிட்ட இத சொன்னா தாங்கிக்கிட மாட்டாரே .தலை கிர்ருன்னு சுத்துதே. நிலை குலைந்துதான் போனாள் சீதாம்மா. என்னம்மா நான் சொல்லிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு சும்மா நிக்குறியே .கவலபடாதம்மா நாங்க அடிக்கடி வந்து பாத்துக்கிருவோம் . சரிப்பா அப்பாக்கிட்ட சொல்லுறேன்.
என்னங்க நம்ம சாம்பசிவம் அவனோட மாமா வீட்டுக்கு போறானாம் .இங்க வசதி பத்தலையாம் .தழுதழுத்த குரலில் சீதாம்மா சொன்னாள். சதாசிவமும் ஆடித்தான் போனார்.
இத அவனே சொன்னானா ? கேட்டார்.
ஆமாங்க .
சரி சரி ,அவனே ஒரு முடிவு எடுத்த பின்ன நாம குறுக்க நிக்கவேண்டாம் .அவன சந்தோஷமா அவன் மாமா வீட்டுக்கு போச்சொல்லு. நீ ஒன்னும் கவலைபடவேண்டாம் .எல்லாம் விதிப்படி நடக்கட்டும். சொன்னார்.( தவிக்கும் உள்ளத்தோட) .
அடுத்த நாள் .வாசலில் கார் வந்து நின்னது. சாம்பசிவமும் சரண்யாவும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டுசென்று
நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. ஒரே ஒரு தடவை மட்டும் மனைவியோடு வந்து சென்றான் .மகன் போன பின்பு சீதாம்மா நோய் வாய் பட்டு சீக்கிரமாக சதாசிவத்தை விட்டு சென்று விட்டாள்.
சதாசிவமும் பேருக்கு ஏதோ மகன் கொடுக்கும் காசில் வாழ்ந்து கொண்டிருந்த்தார்.
ஒரு நாள் சாம்பசிவம் வந்து, அப்பா என்னை எங்க கம்பெனியிலிருந்து லண்டன்
பிராஞ்சுக்கு டெபுடேஷன்ல மாத்திருக்காங்க .அடுத்த வாரம் நானும் சரண்யாவும் றப்படுறோம்.
அப்படியாப்பா மிக்க சந்தோஷம் ..சொல்லிக்கொண்டார் .
நீங்க கவலை படாதீங்கப்பா.பக்கத்து டவுன்ல இருக்கிற முதியோர் இல்லத்துல ஒங்களுக்கு இடம்பாத்து பீஸ் எல்லாம் கட்டிட்டேன் .நீங்க நாளைக்கே அங்க போயி சேந்த்துக்கலாம். நான் நாளைக்கி வந்து கூட்டிட்டு போறேன். ரெடியா இருங்க. (மனதில் சீதாம்மா எட்டி பார்த்தாள். புண்ணியம் செய்தவள் போய்ட்டா...ம்ம்ம்ம் )
தலையை ஆட்டினார்.
முதியோர் இல்லத்துக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்னரை ஆண்டுகள் கடந்துவிட்டது.மகனிடமிருந்து ஒரு விசாரிப்பு கூட இல்லை.மாதா மாதம் பணம் மட்டும் முதியோர் இல்ல நிர்வாகிக்கு வந்துவிடும்.
மனைவியின் ஞாபகம் அப்பப்ப தொல்லை கொடுத்தது.மன பாரம் கண்ணீராய் அவ்வப்போது எட்டி பார்க்கும்.அப்போதெல்லாம் அவருக்கு ஆதரவளிப்பது அந்த வேப்பமர நிழல் தான்.
காலை பத்து மணி இருக்கும் .ராணி பாட்டி,பேகம் பாட்டி,மரியா பாட்டி மூவரும் இல்லத்திலிருந்து வெளியே வந்தனர் .
, என்னக்கா இன்னிக்கு சதாசிவம் அண்ணன் காலைல ஒண்ணுமே சாப்பிடாம ஒக்காந்திருக்காரு ? இது ராணி பாட்டி ,
வாங்க போயி சாப்பிட கூபிடுவோம்னு மூணு பேரும் சதாசிவத்தை சாப்பிடக்கூப்பிடுகிரார்கள் .
என்னண்ணா .ஏதோ மாதிரி இருக்கீங்க
.பேகம் பாட்டி கேட்டாள்.
தலையை தூக்கி பாத்து ,ஒண்ணுமில்லையே
பதில் சொன்னார்.
முகத்தில் கவலை ரேகை கோடிட்டிருந்தது.
இல்லேண்ணா!.
நீங்க காலைலேருந்து ஏதோ நினைவா இருக்கீங்க. மரியா பாட்டி சொன்னாள்.
ம்ம் .. புள்ள லண்டன்ல இருக்கான் .ஒரு விசாரிப்பு கூட இல்லையேன்னு கவலையா இருக்கும் .
இது ராணி பாட்டி.
என்ன செய்யுறது இந்த காலத்துல தொப்புள் கொடி கட்டான உடனேய பாசமும் கட்டாயுடுது இல்லாட்டி நாம எல்லாம் இப்படி புள்ளைங்க ,இருந்தும் அனாதைகள் மாதிரி உறவுகளின் பாசத்துக்கு ஏங்குவோமா?
பெருமூச்சு விட்டாள் ராணிப்பாட்டி.
பேகம் பாட்டியும் ஒரு ஒருநிமிடம் ஏங்கித்தான் போனாள்.
மரியாபாட்டி மட்டும் எதார்த்தத்தை பேசினாள். இது என்ன நம்ம குற்றமா ,இல்ல சமுதாய மாற்றத்தின் குற்றமா.,நம்மள மாதிரி
நல்லா வாழ்ந்திட்டு, கொண்டவனையும் கொண்டவளையும் இழந்து , பெத்த உறவுகளால வயசான காலத்தில இப்படி தள்ளி வச்ச அனாதைகள் போல பாசத்துக்கு ஏங்கி தவிக்கணுமா?.
ஆனா ஒண்ணு! ஆண்டவன் எது செய்தாலும் அதிலே ஒரு பாடமிருக்கும். இனச்சண்டை மதச்சண்டை, உறவுச்சண்டை போடுற இந்த ஒலகத்தில நம்மளை மாதிரி சொந்த உறவுகளை இழந்தாலும் இனம் ,மதம், தாண்டி ஒரு நல்ல புதிய உறவுகள் கிடச்சியிருக்கிறத நெனச்சி நாம இறைவனுக்கு நன்றி செலுத்தணும் என்றாள் மரியா பாட்டி.
.
" பணத்தின் மீது தான் பக்தி என்றபின்
பந்த பாசமே ஏதடா ?
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா !!
அண்ணன் தங்கைகள் தானடா !! "
என்ற கண்ணதாசனின் வைர வரிகள் காந்த குரலோன் TMS ன் இனிய குரலிலே காதில் இதமாய் ஒலிக்க,
அனைவரின் முகத்திலும் உறவுகளைப் பார்த்த ஒரு உற்சாக மின்னல் பளிச்சிட்டது.