*****இது ஒரு மழைக்காலம்******* இது நடந்து முடிவுறாத ஒரு உண்மை கதை,,,,
சிறு கதை
*****இது ஒரு மழைக்காலம்*******
இது நடந்து முடிவுறாத ஒரு உண்மை கதை,,,,
{உயிரோடு கலந்த ஓர் உயிர் உயிரற்று போனபோது
ஏற்பட்ட ஓர் வலியின் கண்ணீர் தான் இந்த
மழைக்காலம்}
சில் என்ற மாலை பொழுதில்
கார் மேகம் சூரியனை மறைக்க
பூமியெங்கும் இதமான நிழலில் மயங்கி இருக்க
சிறு சிறு தூரல்களுடன் மழைத்துளி என் மேனி
நனைக்க ஒதுங்கினேன் அவள் சொன்ன
அந்த பேருந்து நிறுத்தம் அருகே,
அந்த பேருந்து நிறுத்தம் அருகே இருந்த தேநீர்
விடுதியின் சுவற்றில் ஓட்ட பட்ட மாலை மலர்
நாளிதழில் இன்று 24 மணிநேரம்
கன்னியாகுமரி மவாட்டத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும்
இடியுடன் கூடியமழை மழை பெய்யும் என்ற வாசகத்தை படித்த வாறே ,
என் கண்கள் அடுத்த செய்தியை வாசிக்க ஆரம்பித்தது
அடுத்த செய்தியில் நடிகை நமிதாவுக்கு கோயில் கட்ட
இடம் தேர்வு என்ற வாசகத்தை படித்து
புன்னகையோடு சாலையோரம் கண்களை திருப்பினேன்,
மழை வேகமாக இரச்சல் சத்தத்தோடு பெய்து கொண்டிருந்தது
சாலையெங்கும் மழைவெள்ளம் சூழ்ந்து கொண்டது
கொட்டும் மழையிலும் பள்ளிவிட்டு சென்றுகொண்டிருந்த பள்ளி சிறுவர்கள்
மழையில் நனைந்த வாறே ஏய் காகாவுக்கும் குருவிக்கும் கல்யாணம்
என்று சத்தமிட்டு சாலையோரம் தேங்கி கிடந்த வெள்ளத்திலே துள்ளி குதித்து சென்றதை
பார்க்கும் போது, என் குழந்தை பருவம் லேசாக
இதழோரம் புன்னகையை உதிர செய்தது,
காற்றும் மழையும் வேகமாக பெய்துகொண்டிருக்க
காற்றில் பறக்க முயலும் குடையை
ஒருபுறம் கைய்குள் அடக்க முயற்சிப்பதும் மறுபுறம்
கைபேசியை தன் இடபக்க காதில்
வைத்துக்கொண்டு கல கல வென்று சிரித்து பேசிக்கொண்டே
நான் நின்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்ற ஒரு
கல்லூரி மாணவியை என் அருகமையில் பேருந்துக்காக
காத்திருந்த வயதான முதியவர்கள் முனு
முனுத்துக்கொண்டிருன்தனர்,
அப்போது பார்வதிபுரம் to பார்வதிபுரம் பேருந்து
பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது தொடர்
மழையால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்
முண்டி அடித்துக்கொண்டு பேருந்துக்குள் ஏறினர்
சிலர் கூட்ட நெரிசல் மிகுதியாக இருந்ததால்
அடுத்த பேருந்தில் செல்லலாம் என்று இறங்கி
மறுபடியும் அடுத்த பேருந்துக்காக காத்திருந்தனர்,
கடிகாரத்தை பார்த்துக்கொண்டே தொலைவிலே
பார்த்த போது திடீரென்று என் கைபேசி அலறியது
எடுத்தேன் எதிர் முனையில்
என் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது
அவனிடம் பேசாமலையே அழைப்பை
துண்டித்தேன் மறுபடியும் மறுபடியும் நண்பனிடம்
இருந்து அழைப்பு வந்தது வேறு வழி இன்றி
நண்பனிடம் பேசினேன்,
டேய் எங்கடா இருக்க
என்று கேட்டான் நான் டேய் மச்சான் 3 வருசமா
அமில்தினி கிட்டசொல்லாத என் காதல
நேற்றைக்கு அவளை சந்திச்சி சொன்னேன் டா
அவ இன்னைக்கு பதில் சொல்றேன்னு
சொன்னாட அதான் அவளுக்காக பென்சாம்
பேருந்து நிறுத்தம் அருகே நிக்கிறேன் டா
நண்பன் : மச்சான் நீ அங்கேயே இருடா உடணே
வரேன் என்று சொல்லி தொடர்பை துண்டித்து
விட்டான் நான் ஒன்றும் புரியாதவனாக,
கண்களை மூடி
பிள்ளாயாறப்பா இன்னைக்கு அமிழ்தினி
எனக்கு நல்ல பதிலை சொல்லணும்
அப்படி சொன்னால் உனக்கு 108 தேங்காய்
உடைக்கிறேன் என்று வேண்டிவிட்டு கண்களை
திறக்கும் போது ஒரு 108 ஆம்புலன்ஸ்
வேகமாக ரிங்காரமிட்டு கொண்டே சென்றதை பார்த்து
பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு முதியோர்
மழை ஓவென்று பெய்கிறது அரசாங்கம் வேறு
சரியாக சாலைகளை பராமரிக்காததினால்
அங்கும் இங்கும் பள்ளம் ஏற்ப்பட்டு
விபத்துக்கள் நடக்கிறது பாவம் அந்த ஆம்புலன்ஸ்
ல செல்லும் உயிருக்கு எதுவும் ஆயிர கூடாது
என்று கடவுளை வேண்டிக்கொண்டனர்
அவர்களின் மனிதாபிமானம் என் கண்களை
நனைய செய்தது நானும் அந்த உயிருக்காக
இறைவனிடத்தில் வேண்டிக்கொண்டிருக்க
திடிரென்று இடிசத்தம் முழங்க தலை நிமிர்ந்து
விண்ணை பார்த்தேன்,
மேகம் தன் கருநீல கூந்தலால்
வானவளின் முகம் மறைக்க விண்ணில்
இருந்து என் கன்னத்தில் விழுந்து தெறித்த
மழைத்துளியில் என்னவள் பூ முகம் பூமி எங்கும்
படர்ந்திருக்க மெல்ல மெல்ல என்னவளின்
நினைவுகள் என்னை ஆட்கொள்ள சிறிது சிறிதாய்
என்னை மறந்து போனேன்,
அவளை முதல் முதல் பார்த்தது,
அவளிடம் காதல் வயப்பட்டது,
அவளிடம் பேச முயற்ச்சி செய்தது,
அவளின் கோபத்திற்கு ஆளானது,
அவளுக்காக கைகளிலும் உடம்பிலும் அவள்
பேரை எழுதி கொண்டது,
அவளுக்காக எழுதிய அத்தனை கவிதைகளையும்
அவளிடம் கொடுக்க தயங்கி என்னிடமே சேர்த்து
வைத்தது,
அவளுக்காகவே ஒவ் ஒரு நாட்களும் உருகியது,
நேற்று மனதில் தைரியத்தை
வரவழைத்துக்கொண்டு அவளிடம்
"இதே இடத்தில் இதே நேரத்தில்" அவளிடம் என்
காதலை சொன்னது நாளை
"இதே இடத்தில் இதே நேரத்தில்" உனக்கு பதில்
சொல்கிறேன் என்று அவள் சொல்லி சென்றது
என்று ஒவ் ஒன்றாக நினைவில் வர
அருகே சென்ற ஒரு வாகனத்தின் சக்கரம் தேங்கி
கிடந்த மழை வெள்ளத்தையும்,சகதிகளையும்
ஏன் மேல் வாரி இறைக்க மயக்கம் தெளிந்தவனாக
கண் திறந்தேன்,
பேருந்து நிழற்க்குடையில் கூரையில் இருந்து
வடிந்து கொண்டிருந்த மழை நீரை கையில்
சேகரித்து உடைகளில் பட்டிருந்த சகதிகளை
சுத்தம் செய்து கொண்டிருந்த போது
டேய் செல்வா,செல்வா என்றவாறே என் நண்பன்
ஓடி வந்தான்
நான் :என்னடா ஆச்சி ஏன் இப்படி மூச்சிரைக்க
ஓடி வர
நண்பன் :டேய் உன் கிட்ட ஒரு விஷயம்
சொல்லனும்டா
நான் :என்னடா சொல்லு
நண்பன் :டேய் அது வந்து ,அதுவந்து
நான் :என்னடா இழுக்காமல் சீக்கிரம் சொல்லு
நண்பன் :டேய் அது வந்து அது வந்து
கொஞ்ச நேரத்துக்க முன்னாடி பார்வதிபுரத்தில் இருந்து
வேட்டூர்னி மடம் நோக்கி மொபட்டில்
வந்துகொண்டிருந்தேன் அப்போ என் எதிரே மூன்று பொண்ணுங்க
காலேஜ் முடிந்து ரோட்டு வோரம் நடந்து போய்ட்டு
இருந்தாங்க,
என் பின்னாடி ஒரு அரசு பேருந்து வேகமாக முந்தி
செல்ல முயற்ச்சி செய்த்தது அந்த பேருந்து நிலை தடுமாறி
என் எதிரே சென்று கொண்டிருந்த அந்த மூன்று பொண்ணுங்க
மேலும் வேகமாக அரசு பேருந்து மோதியது
இந்த விபத்தில் இரண்டு பொண்ணுங்களுக்கு
லேசான காயம் அதில் ஒருபொண்ணு பேருந்து
சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் பலியாகி விட்டது
என்று சொல்லி அழ தொடங்கிடான்
நான் :டேய் அழாதடா அதுக்கு நீ ஏண்டா அழுற
நண்பன் :அது வந்து அது வந்து மச்சி மன்னிச்சிருடா
அந்த பொண்ணு வேற யாரும் இல்லடா உன்
அமில்தினிடா என்று சொன்னதும்
நான் :கோபத்தில் நண்பனின் கன்னத்தில் அரை
விட்டேன் கனத்த குரலில் நீ என்ன லூசாடா
அவளுக்காக தானடா நான் இங்க காத்திருக்கேன்
நிச்சயமா அவ வருவாடா,நிச்சயமா அவ வருவாட
அவளுக்கு ஒன்றும் ஆகாதுடா என்று
சொல்லிக்கொண்டே என் கனமான குரல் இலக
ஆரம்பித்தது,
அழுதேன்,புலம்பினேன்,துடித்தேன் அருகே
இருந்த பேருந்து நிறுத்த சுவற்றில் முட்டி,மோதி
தலையில் அடித்துக்கொண்டேன்,
தாங்க முடிய வில்லை அவள் இழப்பை,
நான் :டேய் அவ இப்போ எங்கடா இருக்கா
நண்பன் :அவள கொஞ்ச முன்னாடிதான்
இந்த பக்கமா 108 ஆம்புலன்ஸ் ல ஆசாரி பள்ளம்
அரசு மருத்துவ மனைக்கு கொண்டு போனாங்கடா,
நண்பன் வருவதற்கு முன்னாடி ஒரு ஆம்புலன்ஸ்
இந்த பக்கமா போன போது அதில் உள்ள உயிருக்காக
கடவுளிடம் வேண்டுதல் செய்தது நினைவில் வந்தது
அழுதுகொண்டே மழையோடு நனைந்து அந்த ஆம்புலன்ஸ் சென்ற
மருத்துவமனை நோக்கி ஓடினேன்,
மருத்துவமனையில் நுழைந்ததும்
அவளை பற்றி விசாரித்து தேடினோம் சிலர் அந்தப்பக்கம்,
சிலர் இந்தப்பக்கம் என்று மாறி மாறி பதில் சொல்ல
அவளை தேடி தேடி அழுது கொண்டே
மருத்துவமனை யில் ஒரு தூநோரம் சாய்ந்து
தலையில் அடித்துக்கொண்டே வளபக்காமாக
மெதுவாக திரும்பிய பொழுது சிலர் கூட்டமாக
நின்று அழுது கொண்டிருந்தனர் எழுந்தேன் ஓடினேன்
அந்த திசை நோக்கி கூட்டமாக இருந்ததால் எட்டி எட்டி பார்த்தவாறே
முன்னால் சென்று பார்த்தேன் ஐயோ தாங்க முடியவில்லை,
என்னவள் முகம் எங்கும் ரத்தக் கரையாய்
உடலில் பல பாகங்கள் சில்லடையாய்
அவள் கால் கொலுசுகளில் தேங்கிருந்த ரத்த துளிகள்
சொட்டி தரையில் விழும் போதெல்லாம்
ஐயோ தாங்க முடியவில்லை இறைவனை
சபித்துக் கொண்டேன்,
என் தேவதையின் முகம் மௌனமாய் ஆழ்ந்த
நித்திரையில் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்
சிறிது நேரத்தில் அவளது உறவினர்களும்,
பெற்றோரும் அவளது உடலை மருத்துவமனையில்
ஒரு அறைக்கு கொண்டு சென்றனர் சிறிது நேரம் கழித்து
அவளது உடல் எங்கும் வெள்ளை துணியால்
சுற்றி காரில் ஏற்றி கொண்டு சென்றனர்
கார் மெதுவாக சென்றது அதன்பின்னே
உறவினர்கள் அழுது கொண்டே சென்றனர்
நானும் அழுதுகொண்டே சென்றேன்,
தலை நிமிர்ந்து வானத்தை பார்த்தேன்
மழைத்துளிகளில் அவள் கைகள் வந்து என்
கண்ணீரை துடைத்து போனது நடந்தேன் அவளை
பின் தொடர்ந்து,
மறுநாள் கல்லறையிலே அவள் புதைக்க பட்டாள்
அவள் புதைக்க பட்ட கலரையின் அருகேயே
நானும் நாட்க்களை நகர்த்தினேன்,
ஒவ் ஒரு நாட்களும்,
ஒவ் ஒரு வாரங்களும் ,
ஒவ் ஒரு மாதங்களும்,
ஒவ் ஒரு ஆண்டுகளும்,
ஒவ் ஒரு யுகங்களும்
விடியும் போதெல்லாம்
அவள் எனக்கு பதில் சொல்ல
உயிர் தெலுவாள் என்ற நம்பிக்கையில்,,,